Wednesday, 17 October 2018

ரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர்பு கருத்தரங்கம்

ரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில்
மக்கள் தொடர்பு கருத்தரங்கம்

ரோட்டரி மாவட்டம் 3000-ன் சார்பாக பெண்கள் மட்டும் உறுப்பினராக உள்ள கரூர் ஏஞ்சல் ரோட்டரி சங்கம் “ரோட்டரிக்கு விசில் போடு” என்ற தலைப்பில் மக்கள் தொடர்பு (Pரடிடiஉ ஐஅயபந) கருத்தரங்கம் கரூர் அழகம்மை ஹாலில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 8 வருவாய் மாவட்டங்களில் இருந்து ரோட்டரி உறுப்பினர்கள் சுமார் எழுநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அகில உலக ரோட்டரியின் ஆலோசகரும், முன்னாள் மாவட்ட ஆளுநருமான ராஜதுரை மைக்கேல், முன்னாள் மாவட்ட ஆளுனர்கள் ம.முருகானந்தம், எஸ்.கோபால், ஜெ.நவமணி, சண்முகசுந்தரம், ரோட்டரி மாவட்டம் 3232 சென்னையைச் சேர்ந்த ஒளிவண்ணன், உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ப.கோபாலகிருஷ்ணன், 2019-20 ஆம் ஆண்டின் ஆளுநர் டாக்டர் ஜமீர்பாஷா, 2020-21 ஆம் ஆண்டின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக வருகை தந்த அனைவரையும் கருத்தரங்கத் தலைவர் மீனாசுப்பையா வரவேற்றார். நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்கள் தொடர்பு குறித்து சிறப்புரையாற்றினார். ரோட்டரியை மக்கள் மத்தியில் எப்படி எடுத்துச் செல்லவேண்டும், தேவை அறிந்து எப்படி சேவை ஆற்றுவது, அதை மக்களிடம் கொண்டு செல்லப்பட்ட விதம், ரோட்டரி  சமுதாய சேவையினை மக்களிடம் சிறப்பாக கொண்டு சென்ற சிறந்த சங்கங்களை மாவட்ட மக்கள் தொடர்பு குழுவினர் இணைந்து, ஆராய்ந்து, மாவட்ட ஆளுநரால் தேர்வு செய்யப்பட்ட சங்கங்களின் விபரம், உலக இருதய தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சுமார் ஆயிரத்து ஐநூறு கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணியை சிறப்பாக செய்தமைக்காக சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன், செயலாளர் ஆர்.எம்.துரைமணி,சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் எஸ்.அழகப்பன், செயலாளர் கே.என்.செல்வரத்தினம், கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதை பாராட்டி தலைவர் எஸ்.செல்வக்குமார், செயலாளர் ஜெ.தனசேகரனுக்கும், திண்டுக்கல் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை நடத்தியதை பாராட்டி தலைவர் டாக்டர்.சி.விஜயராகவன், செயலாளர் ஜி.விஜயராகவனுக்கும், திருச்சிராப்பள்ளி சக்தி ரோட்டரி சங்கம் சார்பாக உடல் உறுப்புதானம் விழிப்புணர்வு மனித சங்கிலி 3ஃ4 கி.மீட்டர் அளவில் சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொண்டதை பாராட்டி தலைவர் எ.வீரலெட்சுமி, செயலாளர் மனசி உதய்க்கும், குவிஸ் தண்டா நிகழ்ச்சியினை நடத்திய மதுரை இன்னோவேட்டர்ஸ் சங்கத்தைப் பாராட்டி அதன் தலைவர் என்.செந்தில்நாதன், செயலாளர் எம்.விஜய் அதர்ஸ்க்கும், சுமார் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் விதைப்பந்துகளை வழங்க உள்ள, திட்டத்தின் முதல் தவணையாக எழுபதாயிரம் விதைப்பந்துகளை வழங்கிய கரூர் ரோட்டரி சங்கத்தைப் பாராட்டி அதன் தலைவர் எம்.முரளி, செயலாளர் சி.கே.ராமசாமிக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு தேவதைக்குடில் என்ற தலைப்பில் வீடு கட்டிக்கொடுத்த கரூர் ஏஞ்சல் ரோட்டரி சங்கத்தைப் பாராட்டி அதன் தலைவர் ஆர்.தமயந்தி, செயலாளர். கே.ராஜேஸ்வரிக்கும் மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என். கண்ணன், டாக்டர்.ஜமீர்பாஷா, அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் இணைந்து விருதும், சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில் மக்கள்; தொடர்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம், செயலாளர் எஸ்.சுகுமார் இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். நிறைவாக கருத்தரங்க செயலாளர் கவிதா ராமமூர்த்தி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.No comments:

Post a comment