Tuesday, 20 November 2018

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆய்வுப்பணிகள், நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப்பணிகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆய்வுப்பணிகள், நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப்பணிகள் குறித்து  கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கதர் மற்றும் கிராம தொழில்த்துறை அமைச்சர் பாஸ்கரன், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத்தலைவர் வைரமுத்து, சிவகங்கை மாவட்டக்கழகச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், தமிழ்நாடு குடிசைமாற்றுவாரிய மேலாண்மை இயக்குனர் ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரி சண்முகம் ஆகியோர் பங்கேற்று ஆய்வுகள் செய்தனர்.  இதில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் வருவாய்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும், ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமரன் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குடிநீர் வழங்கல், சுற்றுப்புற தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்றுவதை விளக்கினார். மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் ஜெயபாலன் மின் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருவது குறித்தும் விளக்கிப்பேசினார். இதே போல வேளாண்மை உதவி இயக்குனர் எட்வர்சிங், வட்டாரமருத்துவ அலுவலர் அருள்மணிநாகராஜன், மற்றும் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி,  கிராமநிர்வாக அலுவலர் பாண்டியன், அரசமலை ஊராட்சி செயலாளர் ராமசாமி உட்பட பலர் பேசினார்கள்.
இதில் கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: பொன்னமராவதி தாலுகா பகுதியில் கஜா புயல் மீட்பு பணிகள் சிறப்பாக நடைபெற முழுஒத்துழைப்புடன் செயல்பட்டு வரும் அனைத்துறை அதிகாரிகளுக்கு எங்கள் குழு சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைத்துப்பகுதிகளிலும் வடிகால் அமைக்கும் பணிகள் செய்யவேண்டும், வீடுகள் பாதிக்கப்பட்டோர், குடியிருக்க வீடுகள் இல்லாதோருக்கு இலவச வீடுகள் கொடுக்கவேண்டும், இதில் அந்த குடும்பத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள்,  சொத்துகள் உள்ளது எனக்காரணம் காட்டி  5 தடவை 10 தடவை மனு கொடுத்து அலையும் முதியோர்களை நிராகரிக்காமல் கஷ்ட்ப்படும் அனைத்து முதியோருக்கும்  அதிக ஓஏபி கொடுக்கவேண்டும், புயல்பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பேசினார்.
  இதில்  மாவட்டத்திற்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.ஸ் உயர் அதிகாரி சண்முகம் பேசியதாவது கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதல் இன்றி கணக்கீடு செய்யும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், குடிசை வீடுகள், ஓட்டுவீடுகள் சேதம், பயிர் சேதம் போன்ற பணிகளை மூன்று துறைகளும் இணைந்து செயல்படவேண்டும்,  மற்ற பகுதிகளுக்கு பேரிடர் வந்தபோது சேவை மனப்பான்மையோடு நிறைய உதவிசெய்தோம். ஆனால்  நம்பகுதியில் இந்த பேரிடர் வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி முழு ஈடுபாட்டுடன் பணியாற்றவேண்டும், மாநில வராலாற்றிலே இல்லாத அளவிற்கு வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, கேரளாவில் இருந்து 4200மின்துறை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார்.
இதில் தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத்தலைவர் வைரமுத்து, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் புயல் மீட்பு நடவடிக்கைகள்  குறித்தும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் இதுவரை பணிகளை சிறப்பாக முடித்தவர்களையும் பாராட்டியும் ஆய்வுகள் குறித்து விளக்கிப்பேசினார்.
இதில் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் சேர்மன் ராமையா,  புதுக்கோட்டை ஆர்டிஓ. டெய்சிகுமார், நிலவளவங்கித்தலைவர் பழனியாண்டி, துணைதாசில்தார் ஜெயபாலன், முன்னாள் சேர்மன் அழகுசுப்பையா, நகரச்செயலாளர் தங்கப்பன், முன்னாள் நகரச்செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய பொருளாளர் டேவிட் பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை சார் அனைத்து அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், மருத்துவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்,  கிராம உதவியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கட்சி நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

படவிளக்கம்:  பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் கஜா புயல் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசுகிறார். அருகில் வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து, செந்தில்நாதன் எம்பி, சண்முகம் ஐஏஎஸ் மற்றும் பலர் உள்ளனர்.


செய்திகள்.. கீரவாணி இளையராஜா பொன்னமராவதி செய்தியாளர்..
@Ilayaraja Alagu Pmv @ILAYARAJA KEERAVANI

No comments:

Post a comment