கஜா புயல் நிவாரண சிறப்பு பொது மருத்துவ முகாம்
அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை இணைந்து தைலா நகர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கஜா புயல் நிவாரண சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் நுரையீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் வி.தமிழரசன் தலைமையில் எஸ்.கார்த்திகா, ஆனந்த் மற்றும் மருத்துவகுழுவினர் இணைந்து இருதய சுருள் படம், இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பார்க்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். முகாமில் குழந்தைகள் நலசிறப்பு மருத்துவர் எஸ்.ராம்தாஸ், மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கே.ஆறுமுகம், சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத்தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், ஊர் முக்கியப் பிரமுகர்கள் ரெ.செல்வராஜன், ரெ.பாபு, ம.சேகர், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் அ.சுப்பையா, முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்ட மாவட்ட அலுவலர் சோ.சாமிநாதன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வா.தனவேந்தன், பெ.செபாஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
#gaja
#gaja
COMMENTS