Saturday, 3 November 2018

பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் விழா


பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் விழா
                புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் - சித்த மருத்துவப் பிரிவு, புதுக்குளம் நடைப் பயிற்சியாளர்கள் சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சிவகாமி அம்மாள் இரத்ததான கழகம் மற்றும் மாருதி கார் கேர் இணைந்து புதுக்குளம் வளாகத்தில் புதுக்குளம் நடைப்பயிற்சியாளர் சங்கத் தலைவர் .நைனாமுகமது தலைமையில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், சிவகாமி அம்மாள் இரத்ததானக் கழகத் தலைவர் மெஸ்.மூர்த்தி, சிட்டி ரோட்டரி செயலாளர் கே.என்.செல்வரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன் வரவேற்றார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கி.சரவணன், அருள்திரு.சவரிமுத்து அடிகளார் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் ஆர்.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் விழாவினை துவக்கிவைத்து கூறும் போது பன்றிக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளுயன்சா என்னும் வைரஸ் வகையால் உருவாகும் நோய் இது பன்றிகளை தாக்கும் வைரஸ் கிருமியாகும் மனிதர்களுக்கு வைரஸ் கிருமியால் சளி, காய்ச்சல் எப்படி வருகிறதோ அதே போன்று பன்றிகளுக்கும் இந்த வைரஸ் கிருமியால் சளி, காய்ச்சல் வரும். பன்றிகளுடன் நெருக்கமாக இருந்து பன்றி வளர்ப்பவர்கள் மற்றும் கால்நடை ஊழியர்கள் மூலம் இந்த நோய் மனிதனுக்கு அரிதாக பரவுகிறது. இதனை "Zoonotie Swine Flu" என்கிறோம். இந்த இன்ஃப்ளுயன்சா என்னும் வைரஸ் கிருமிக்கு ஒரு வினோத சக்தி இருக்கிறது. ஒரு வைரஸ்; கிருமி மற்றொரு வைரஸ் கிருமியுடன் சேர்ந்து மூன்றாவது ஒரு புதிய வைரஸை உருவாக்கும் தன்மை கொண்டது. இவ்வாறு பன்றியிடமிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ் மீண்டும் பன்றியின் உடலுக்கு செல்லும் போது மாற்றம் ஏற்பட்டு புதிய ஒரு வைரஸ் வகையை உருவாக்குகிறது. இவ்வாறு உருவான வைரஸ்கள் H1N1 ,H3N2, H2N1, H2N3, H1N2, H3N1என்ற ஆறு வகையாக உருமாறுகிறது. இவை மீண்டும் மனிதனுக்கு வந்து பன்றி காய்ச்சலாக வருகிறது. பன்றிகாய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், உடல் குளிர்தல், தொண்டை வலி, கடுமையான தலைவலி, வாந்தி, பேதி, தசைவலி, உடல் சோர்வு போன்றவைகள். பன்றிக்காய்ச்சலில் மூன்று நிலைகள் உள்ளன முதல் நிலை உடலில் சிறிதளவு உஷ்ணம், லேசான தொண்டை வலி, இலேசான வயிற்றுப் போக்கு சிறிதளவு வாந்தி, சற்று உடல் சோர்வு இரண்டாம் நியை கடுமையான காய்ச்சல், தொண்டை வலி, மூன்றாம் நிலை மேற்கண்ட குறிகுணங்கள், நெஞ்சுவலி, முச்சு திணறல், தலைசுற்றல், மயக்கம், குறைவான இரத்த அழுத்தம் மற்றும் நகங்கள், கை. கால் போன்றவை நீல நிறமாக மாறுதல் போன்ற குறிகுணங்கள் தென்படும். குழந்தை பருவத்தினரில் பால் குடிக்க மறுத்தல், விடாமல் அழுதல், கடுமையான காய்ச்சல், வலிப்பு போன்றவைகள் ஏற்படும். நோய் வராமல் இருக்க கடைபிடைக்க வேண்டிய வழிமுறைகள் தினமும் நமது கைகளை சுத்தமாக உணவு உண்பதற்கு முன்னும், உண்ட பின்பும் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். மேலும் கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சளி, இருமல் இருப்பவர்கள் தாங்கள் இருமும் பொழுது கைகுட்டையால் வாயை மூடிக்கொள்ளவேண்டும். இந்த நோய் பரவும் காலங்களில் ஒருவருக்கொருவர் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சளி, இருமல் இருக்கும் போது குழந்தைகளை வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து நோய் குணமானபின் பள்ளிக்கு அனுப்பி வைத்தால் பலருக்கு பரவாமல் இருக்கும் மற்றும் பெரியவர்கள் பணிக்கு செல்வதோ அல்லது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சுற்றுப்புறங்களை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனே மருத்தவரை அணுகி முறையான சிகிச்சை பெறவேண்டும். இதனால் பொதுமக்கள் வீனாக பீதி அடையவேண்டாம். இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருத்துவம் இருக்கிறது. அதாவது கபசுரக்குடிநீர் என்ற மருந்து இந்திய முறை மருத்துவ பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரை பருகிவந்தால் பன்றிக்காய்ச்சல் நம்மை அணுகாது அத்துடன் பன்றிக்காய்ச்சல் வந்தால் அதற்கும் கபசுரக்குடிநீர் பருகினால் நோய்குணமாகும். இந்த கபசுரக்குடிநீர் 15 வகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆடாதோடை, அக்கரகாரம், கற்பூரவள்ளி, திப்பிலி, சீந்தில், கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, கோஷ்டம், நிலவேம்பு, கடுக்காய்தோல், இலவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி ஆகிய மூலிகைகளை சமஅளவு ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு இதில் 5 கிராம் எடுத்து 200 மிலி தண்ணீரில் கலந்து நன்கு காய்ச்சி 50 மிலி ஆக சுருக்கி காலை, மாலை இரண்டு வேலை 50 மிலி குடித்துவந்தால் பன்றிக்காய்ச்சல் குணமாகும்.ஆகவே பொதுமக்கள் மேற்கண்ட குறிகுணங்கள் இருந்தால் உடனே இந்தியமுறை மருத்தவ பிரிவுகளில் வழங்கப்படும் கபசுரகுடிநீர் மருத்தவரின் ஆலோசனைப்படி பருகி பன்றிக்காய்ச்சல் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.நிகழ்ச்சியில் ஜி.தனகோபால், .ஆரோக்கியசாமி, பிரியாராஜா, எம்.சுந்தரம், வர்த்தக சங்க பொருளாளர் எஸ்.கதிரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சிட்டி ரோட்டரி சங்க பொருளாளர் பி.அசோகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது


No comments:

Post a comment