Sunday, 30 December 2018

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டு நிலை பி.எஸ்.வி பாலிடெக்னிக் கல்லுரியில் 28.12.2018ந் தேதி புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பழகுநர் உரிமம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லுரி செயலாளர் திரு.சண்முகம் தலைமையேற்றார். கல்லுரி முதல்வர் திரு.குமார் வரவேற்புறை நிகழ்த்தினார். புதுக்கோட்டை சுழற் சங்க செயலாளர் திரு. மோகன்ராஜ் சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர். திரு.செந்தாமரை சாலை பாதுகாப்பின் அவசியம் ஓட்டுனர் உரிமத்தின் முக்கியதுவம் மற்றும் வாகனங்களுக்கு காப்பீடு செய்வதன்; முக்கியதுவம் குறித்து சிறைப்புறையாற்றினார். இம்முகாமில் கல்லுரி மாணவர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் என 20 பேருக்கு பழகுநர் உரிமம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லுரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.





No comments:

Post a comment