இந்த கல்வியாண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீடு 40,000 கல்லூரியில் அமல்: பிரதமர் மோடி அறிவிப்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் 1,500 படுக்கை வசதிகளுடன் கூடிய சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பிறகு, அங்கு நடத்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கடந்த 100 நாட்களில் 7 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் கல்லூரிகள், 900 பல்கலைக் கழகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். இதற்காக இந்த கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும்.
இதனால், ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு மோடி பேசினார். இதேபோல் அகமதாபாத்தில் ஷாப்பிங் திருவிழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி ேபசுகையில், ‘‘கடந்த நாலரை ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக எனது அரசு உதவியுள்ளது’’ என்றார்.இதற்கிடையே பாஜ இளைஞர் அணி, ‘வெற்றி லட்சியம்- 2019’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதுகுறி த்து தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது திறமை வாய்ந்த இளைஞர்களின் எண்ணங்களையும், ஆசைகளையும் நிறைவேற்ற நமது கட்சி முழு உறுதியுடன் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
COMMENTS