பேட்ட திரைவிமர்சனம் : பாட்சா படத்தை விட மாஸா இந்த பேட்ட?
_சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன், சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பேட்ட... இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது... இந்த திரைப்படத்தில் பெரிய நச்சத்திர கூட்டமே நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு இருந்தது... அதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் திரைப்படத்துடன் பேட்ட வெளியாவதால் போட்டியும் இருக்கிறது... அந்த வகையில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பார்ப்போம்... இந்தப் படத்தில் இரண்டு விதமான காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்... இளமையாக இருக்கும்போது நடிகை திரிஷாவுடன் டூயட் பாடி காதலிக்கிறார்... பிறகு வயதான பிறகு நடிகை சிம்ரன் உடன் டூயட் பாடுகிறார்... இந்த இரண்டு கதாபாத்திரமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மிக அருமையாக உள்ளது..._
_குறிப்பாக வில்லனாக வரும் நவாப்பை விட ஜித்துவாக விஜய் சேதுபதியின் நடிப்பு அபாரமாக உள்ளது... மேலும் சசிகுமாரின் கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரமாகவும் இந்த படத்தின் முக்கிய திருப்புமுனையாகவும் இருக்கிறது... மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு ஆணி வேராக இருப்பது மேகா ஆகாசின் கதாபாத்திரம்... மேலும் பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரின் பழைய ஸ்டைலில் பார்ப்பது மிக அருமையாக உள்ளது இதற்காகவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு ஒரு சல்யூட் கொடுக்கலாம்..._
_அதுமட்டுமில்லாமல் அனிருத்தின் இசையும் பட்டையைக் கிளப்புகிறது அதிலும் குறிப்பாக மரண மாஸ் பாடல் தியேட்டரில் அனைவரையும் விசிலடித்து ஆட வைத்துள்ளது.._ _ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் பேட்டை திரைப்படம் பல வருடத்திற்கு பிறகு ஒரு ரஜினி படம் பார்த்த திருப்தியை கொடுத்துள்ளது..._ _இப்படம் குடும்ப ஆடியன்ஸ்களை கவரும் திரைப்படமாக அமைந்துள்ளது..._ _மேலும் ரஜினி ரசிகர்களை பலவருடம் கழித்து துள்ளி குதித்து ஆட வைத்துள்ளது..._
COMMENTS