Sunday, 13 January 2019

தேசிய இளைஞர் தினம்

தேசிய இளைஞர் தினம்
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம,; பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராமக்கல்விக்குழு இணைந்து நடத்தும் முள்ளங்குறிச்சி அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சங்கத் தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி தலைமையில் தலைமைப் பண்பு, நேர மேலாண்மை பயிற்சி முகாம் (சுலுடுயு); நடைபெற்றது. முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.நாகராஜன் வரவேற்றார். துணை ஆளுநர் சி.அருண்குமார், மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னாள் மாவட்ட ஆளுநர் ம.முருகானந்தம் அவர்களின் கனவுத்திட்டமான பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நாப்கின் எரியூட்டும் இயந்திரத்திட்டத்தை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தார். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் இரா.இராஜாகோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை வழங்கினார். மேலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் நமக்கு நாமே சுய பரிசோதனை என்ற தலைப்பில் வழிகாட்டி கையேட்டினை வழங்கி மேலும் இந்தப்பள்ளி 99 சதவிகிதம் தேர்வு பெற்றதை பாராட்டி நினைவு பரிசு வழங்க அதை தலைமையாசிரியர் பெற்றுக்கொண்டார். மேலும் பேசுகையில் இன்றைய தேசிய இளைஞர் தினத்தில் நீங்கள் எல்லாம் நல்ல கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவர் மேலும் பேசுகையில் நம் வாழ்வில் எப்போதுமே உயர்வான விஷயங்களை எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணி அவை நிறைவேறாவிட்டால் கூட நாம் உயர்வாகச் சிந்திப்பதை மாற்றிக்கொள்ளக்கூடாது. எட்மண்ட் ஹிலாரி முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தை எட்ட முயன்றபோது தோல்வியுற்றார். அப்போது நிருபர்கள் அவரிடம் அதனைப் பற்றிக் கேட்டபோது நிச்சயம் அடுத்த முறை எவரெஸ்ட்டை நான் வெல்வேன். ஏனென்றால் எவரெஸ்டிற்கு இனி வளர்ச்சி இல்லை. ஆனால் நான் ஒவ்வொரு நாளும் வளர்கிறேன் என்றார். அவர் சொன்ன வளர்ச்சி, அறிவால், மனத்தால், நம்பிக்கையால், அனுபவங்களால் வளரும் வளர்ச்சி, அவர் சொன்னது போலவே அடுத்தமுறை எவரெஸ்;டில் ஏறி சாதனை புரிந்தார். நாமும் இதுபோல் எப்போதுமே உயர்வாக எண்ண வேண்டும். எதிலும் 100 சதவீதத்தை அடைய முயற்சி எடுத்தால் நீங்களும் வெற்றிபெற முடியும் என்றார். விழாவில் மதுரை உதயக்குமார் ரோட்டரி சங்க உறுப்பினர்கள,;  இருபால் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் ஆர்.பிச்சையா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவினை சுதாகர் தொகுத்து வழங்கினார்.
No comments:

Post a comment