https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 18 January 2019

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..!

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை இன்று கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாகத் ‌தெரிகிறது

ஏற்கெனவே இரண்டு முறை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 30 நிறுவனங்கள் 49 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment