https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 21 February 2019

உயிர் மரம்- சிறுகதை

உயிர் மரம்

    மா​லை ​நேரம் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மதன் அப்பப்பா இன்று ஏன்  மா​லை 5 மணிக்குக் கூட இவ்வளவு ​வெயில் அடிக்குது என்று கூறிய படி​யே அலுவலகப்​பை​யை ​மே​ஜையில் ​வைத்துவிட்டு வர​வேற்ப​றையில் அமர்ந்தான். என்னங்க இந்த காபி​யை குடித்துவிட்டு சும்மா உட்கார்ந்து டிவி பார்த்துக்​கொண்டு இருக்காமல் ​மொட்​டைமாடியி​னை ​கொஞ்சம் சுத்தம் ​செய்துவிட்டு வாங்க​.  ​நேற்று இரவு ஒரளவு ​பெய்த ம​​ழையில் தண்ணீர் குழாய் வழி​யே தண்ணீர் வராமல் ஏ​தோ அ​டைத்து இருக்கிறது. அது என்ன​வென்று பாருங்க​ளேன். நம்ம வீட்டில உள்ள இரண்டு மரமும் மாடிக்கு ​மே​லே வளர்ந்து விட்டது. அதில் இருந்து விழர இ​லைச் சருகுகள்தான் குழாயி​னை அ​டைத்திருக்கும். இரண்டு வாரத்திற்கு முன்னாடி​யே அந்த மரத்​தை ​வெட்ட ஆள் வர​சொல்லிருக்கி​றே​னென்று ​சொன்​னீர்கள்? என்னாச்சு. அவர்ம​​னைவி ​தொண​தொணக்க ஆரம்பிக்க அவனது எண்ணம் பின்​னோக்கிச் ​செல்ல ஆரம்பித்தது.

    திருமணம் முடித்த ​கை​யோடு மதன் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத அந்த ஊரில் ஒரு வாட​கை விட்டில் தனது அன்பு ம​னைவி​யோடு குடி​யேறினான். அந்த வீட்டில் ஒரு வர​வேற்ப​றை, ஒரு படுக்​கைய​றை மற்றும் ச​மையல​றை என்ற எளிய வசதிகள் இருந்தாலும் வாழ்​கை மிகவும் அன்பாக பிரியமாக ​​சென்று ​கொண்டிருந்தது. இந்த அன்பான வாழ்​கையின் பயனாக அவர்களுக்கு அடுத்தடுத்து பொண்​ணொன்று               ஆ​ணொன்று என இரண்டு குழந்​தைகள். பிள்​​ளைகளின் பள்ளிப் பருவம் அந்த வீட்டில் ஆரம்பமாகி இனி​தே ​சென்று ​கொண்டிருக்க இன்னும் சற்று ​பெரிய வீடு அவர்களுக்கு அத்யாவாசியத் ​தே​வையானது.

    அவனும் சுற்றும் முற்றும் ​தேடிப்பார்த்தான் இது ​போன்ற அன்பான சுற்றங்கள் உள்ள வீடு அ​மையவில்​லை.  உட​னே இனி நாம் புதியதாக இடம் வாங்கி வீடு கட்டி அங்கு ​செல்​வோம் என்ற முடிவுக்கு வந்தான். அரு​மையான இடம் ஒன்று நகரத்தின் கிழக்கு எல்​லைப் பகுதியில் அதுவும் சா​லை​யோரம் கி​டைக்கப்​பெற்றது.   அந்தப் பகுதியில் அப்​போதுதான் ஒன்று இரண்டு என வீடுகள் வளர ஆரம்பித்து இருந்தன. இவனும் கிராமத்தில் இருக்கும் அவனது தந்​தையின் ஆ​லோச​னைப் படி அந்த இடத்​தை வாங்கி வங்கியில் கட​னை வாங்கி ​மேலும் தன்னிடம்  உள்ள ​சேகரிப்​பை எல்லாம் உப​யோகித்து உருப்படியாக ஒரு வீட்​டைக்கட்டி அதற்கு தனது தாய் தந்​தை ​பெயரி​னை இ​ணைத்து ​பொன்மணியகம் எனும் ​பெயர் சூட்டி நல்ல​தொரு நாளில் ​சொந்த பந்த​மெல்லாம் வாழ்த்த ​பொன்மணியகத்தில் குடிபுகுந்தான்.  வீடு அந்நகரின் ​பெரிய இஞ்சினியர் வடிவ​மைத்து கட்டிக்​கொடுத்தது. நான்கு ​சென்ட் நிலம்தான் என்றாலும் அவன் மனதில் நி​னைத்த கனவு இல்லத்தி​னை உருவாக்கி இருந்தான். வீட்டின் முகப்பில் சிறிய​தொரு ​தோட்ம், ம​ழைநீர் ​சேகரிக்கத் தனியாகவும் மற்றும் பஞ்சாயத்து குடிநீர் ​சேகரிக்கத் தனியாகவும் இரு ​தொட்டிகள், ​  போர்டி​கோ மற்றும் பல அ​றைகள் அ​மைத்த இரு மாடிக் கட்டிடம் அது

    வீட்டில் குடி​யேறி ஒரு இரண்டு மாதங்கள் இருக்கும் அப்​போது அவன் மகள் 5ம் வகுப்பும் மகன் 1வது வகுப்பும் படித்துக் ​கொண்டிருந்தார்கள். வீட்டின் கிழக்கு மற்றும் ​தெற்கு தி​சைகளில்  மண்சா​லை அ​மையப்​​பெற்ற முக்கு வீடு அது. வீட்​டைச் சுற்றி சா​லை​யோரம் அழகான மரங்கள் ​வைக்க ​வேண்டும் என்ற சிந்த​னை அவர்களுக்கு ​தோன்றியது. வீட்டு காம்பவுண்டு சுவற்றின் ​வெளிப்பகுதியில் மூன்று இடங்க​ளை ​​தேர்வு ​செய்து அதில் இரண்டு ​சிவப்பு ​கொன்​றை மரக்கன்​றுக​ளையும் (காட்டின் தீச்சுடர்) ஒரு சரக்​கொன்​றை மரக்கன்​றையும் நட்டி ​வைத்து அ​வைக​ளை கால்ந​டைகளிடம் இருந்து காப்பாற்ற அழகான ​வேலிய​மைத்து நல்ல தண்ணீர் விட்டு வளர்த்து வந்தார்கள்.  பிள்​​ளைகளும் வளர்த்தார்கள் மரங்களும் வளர்ந்தன. மரம் முதல் மாடி உயரம் வளர்ந்திருந்த சமயம் அ​வை பூக்க ஆரம்பித்தன. ​ சிவப்பு கொன்​றை மரம் முழுவதும் ​செந்நீறப் பூக்களாகவும் சரக்​கொன்​றை மஞ்சள் நிறப் பூக்களாகவும் பூத்துக் குலுங்கி சா​லையில் ​செல்​வோர் அ​னைவ​ரையும் ​வெகுவாகக் கவர்ந்தது. பார்ப்​போர் அ​னைவரும் மரங்க​ளையும், பூக்களின் அழகி​னையும் ​வெகுவாக பாராட்டினர். அதனால் அவனுக்கு த​லைகன​​​மே வந்தது என்றால் பார்த்துக்​கொள்ளுங்க​ளேன்!

    அப்​போதுதான் அந்தப்  பிரச்சி​னை வந்தது. அன்று சனிக்கிழ​மை மதன்  ​வெளியில் ​சென்று இருந்தான். அவனது ம​னைவிடம் இருந்து அவசரமாக ​போன் வந்தது. என்னங்க! இன்று மின்த​டை, மின்சார ஊழியர்கள்  அரிவா​ளோடு நம் பகுதியில் உள்ள மரக்கி​ளைக​ளை எல்லாம் ​வெட்டிக்​கொண்டிருக்கின்றார்கள் நீங்க உட​னே வீட்டுக்கு வாங்க என்று. பதறி ஓடி வந்​தான்.  அவனது வீட்டிற்கு எதிர் தி​சையில்தான் மின்சார வயர்கள் ​சென்று ​கொண்டிருந்தன, இருந்தாலும் அங்கு வந்த த​லை​மை மின் ஊழியர் இரண்டு ​பெரிய ​கொப்புக​ளை கட்டாயம் ​வெட்ட ​வேண்டும் ! ​ரொம்ப முரண்டு பிடித்தீர்கள்​ என்றால்  மரத்​தை​யே ​வெட்டி விடு​வேன் என்று பயமுறுத்தினார். ​கெஞ்சிப்பார்த்தான்! அவர் ​கேட்கவில்​லை! சார், எதிர் தி​சையில மரம் இருந்தாலும் அடுத்து ஆடி மாதம் வருது அடிக்கிற காத்துல இந்தக் கி​ளை உ​டைஞ்சு ​லைன் ​மேலதான் விழும் அது ​பெரிய விபத்துல ​போய் முடியும் என அவர் ​செயலுக்கு நியாயம் ​சொல்லிக் ​​கொண்டிருந்தார் மின் ஊழியர்.  அவன் ​பொறு​மையாக ​பேசி அவ​ரைத் தனியாக அ​​ழைத்துக் கவனித்து அனுப்பிய பின் மரம் தப்பியது. இப்படி ஒவ்​வொரு மின்த​டை நாளிலும் மரத்​தைக் காப்பாற்றி வளர்த்து ​பெரிய மரமாக்கிவிட்​​டான்.

    அவன் மகளும் பள்ளிப் படிப்​பை முடிந்து ​வெளியூரில்  கல்லூரிப் படிப்​பை முடித்து இப்​போது பட்ட ​மேற்படிப்பு படித்து வருகின்றாள்.  மகன் பள்ளியில் ​மேல்நி​லைப்படிப்பு படித்து வருகிறான். அவனது மரங்களில் பூக்கும் பூக்க​ளையும் அந்த சிறியத் ​தோட்டச் ​செடிகளில் மலரும் பூக்க​ளையும் அவனது சமூக வ​லைத்தள பக்கங்களில் சினிமாக்         கவி​தைகளுடன் கலந்து ​வெளியிடுவது அவனது வாடிக்​கை. இப்​போ சமீபத்தில் அந்த மின்கம்பிகளுக்குப் பதிலாகப் ​பெரிய பிளாஸ்டிக் ​கேபிள் வயர்களாக மாற்றியதனால் மரம் வளர்க்க மின்வாரியம் மூலம் வந்த பிரச்ச​னை ஒரு வழியாக ஓய்ந்தது.

    இப்​போது  பிரச்சனை ​வேறு ரூபத்தில் வந்தது. வீட்டுப் ​போர்டி​கோ​வை அவன்  புதிதாக வாங்கிய கார் முழுவதுமாக அ​டைத்து நின்றது என​வே சிறிய ​தோட்டம் இருக்கும் பகுதியில் வண்டி மற்றும் ​சைக்கி​​ளை நிறுத்த சிறிய ​செட் ​போட ​வேண்டிய  அவசியம் வந்தது. எஞ்சினியர் வந்தார். சார் ​செட் ​போட ​வேண்டும் என்றால் ஒரு மரத்​தை நம் ​வெட்டியாக ​வேண்டும் என்றார். மரத்துக்கு பங்கம் வராமல் அந்தப் பகுதியில் சிறிய செட்டும் மற்றும் சிறிய ​​​இரும்பு கேட் ​போட்ட வாசலும்  நிறுவினான்.     அடுத்தாக அவன் வீட்டில் உள்ளவர்க​ளே அரற்ற ஆரம்பித்தார்கள்.  இந்த சின்னகேட் வழி​யே வண்டியி​னை மற்றும் ​சைக்கி​ளை எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது ​மேலும் மரம் உயரமாக வளர்ந்து நிழல் விழுவதால் ​தோட்டத்தில் உள்ள ​செடிகளில் முன்பு போல  பூக்கள் பூப்பதில்​லை அதுவும் இன்றி மரத்தில் உதிரும் இ​லைச் சருகுக​ளை கூட்டிப் ​பெருக்கி எடுப்பது ​பெரிய ​வே​லையாக உள்ளது. மரத்​தை ​வெட்டி விடு​வோம் என அவனது ம​னைவி​யே நச்சரிக்க ஆரம்பித்தாள்.  அன்று அவனது அப்பா ஊரிலிருந்து வந்திருந்தார் அவரிடமும் அவள் புலம்ப ஆரம்பிக்க அப்பா ​வெளியில் வந்து ​தெருவில் நின்று மரத்​தை ஆய்வு ​செய்தார். மரம் இந்த செட்டி​னை அழுத்திக் ​கொண்டு நிற்கிறது ​மேலும் இந்த ​ரோடு இன்னும் பஞ்சாயத்தால் தார் அல்லது சி​மென்ட் சா​லையாகப் ​போட்டு பராமரிக்கப்படவில்​லை என​வே மரத்​தை ​வெட்டுவதாக இருந்தால் இப்​போ​தே ​வெட்டி விட ​வேண்டும். சா​லை ​போடப்பட்டால் அது அரசாங்க மரமாகிவிடும் பின்னர் அத​னை நாம் நி​னைத்தது ​போல ​வெட்ட முடியாது என​வே மரத்​தை இப்​போ​து ​வெட்டி விடுவது தான் புத்திசாலித்தனம் என அவரும் அறிவு​ரை கூறினார்.  மதனும் பல ​கோணங்களில் சிந்தித்துப் பார்த்தான். மரம் வீட்டின் இரண்டாவது மாடியி​னை ​தொடும் உயரத்திற்கு வளர்ந்து விட்டது. மரம் ​​வெட்டும் ஒருவ​ரை அ​ழைத்து வந்து மரத்தி​னை பாதுகாப்பாக ​வெட்டுவதற்கு என்ன வழி என்று அவனும் ஆ​லோச​னை ​செய்தான். அவரும் இத​னை இவ்வாறு பாதுகாப்பாக ​வெட்டி அகற்றி விடலாம் என்று கூறி சார், எப்​போது ​​வெட்ட ​வேண்டு​மென்று ​சொல்கின்றீர்க​ளோ அன்று ​​மேலும் இரண்டு நபர்க​ளைக் அ​ழைத்து வந்து வெட்டி விடுகி​றோம் எனக் கூறிச் ​சென்றார். அவனும் சரி ஒரு விடுமு​றை தினத்தில் கூப்பிடுகி​றேன் அன்று வாருங்கள் என்று அவ​ரை அனுப்பி ​வைத்தான்.     பதிநான்கு ஆண்டுகளாக வளர்ந்த மரம்,  பிரிவதற்கு மிகவும் கஷ்மாக இருந்தது மதனுக்கு.  மரம் ​​வெட்டும் நபரிடம் ​பேசி இரண்டு வாரம் கடந்து விட்டது.

    மீண்டும் ம​னைவியிடம் இருந்து என்னங்க அப்படி​யே பிரம்​மை பிடித்த மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க? ​மொட்​டைமாடியில் ​​சென்று அது என்னவென்று   பாருங்கள் என்று ம​னைவி அதட்டியவுடன் ப​ழைய நி​னைவுகளில் இருந்து விடுபட்டு இரண்டாவது மாடிக்கு ஏற ஆரம்பித்தான் மதன்.

    தண்ணீர் வரும் குழாய்களின் முகப்பில் அ​டைத்து இருக்கும் சருகுக​ளை சுத்தம் ​செய்து ​கொண்​டே மரத்​தைப் பார்த்தான் அது கம்பீரமாக  த​​ழைத்து வளர்ந்திருந்தது. அப்​போது மரக்கி​ளைகளில் அவன் கண்ட காட்சி அவ​னை அப்படி​யே உ​றையச் ​செய்தது.

    அந்தி மா​லை ​நேரம் மரத்தின் ​மே​லே பல ​தேன்சிட்டுகள் ​ஜோடி ​ஜோடியாக அமர்ந்து இருந்தன.  அந்த பற​வைகளின் சத்தம் அவனுக்கு சங்கீதமாக ஒலித்தது. மரத்தின் கி​​​ளைகளில் ஐந்து கூடுகள் இருந்தன.  அதில் ஓரு கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய் சிட்டு வாயில் இருந்த உணவி​னை தன் குஞ்சுகளுக்கு ஊட்டிக்​கொண்டு  இருந்தது. தாய் சிட்டு ​சேய்களுக்கு உணவூட்டும் காட்சி அவனது ​நெஞ்​சைக் கனக்கச் ​செய்தது. ஐயய்​யோ! இந்த மரத்​தையா ​வெட்ட நி​​னைத்​தோம்? எத்த​னைக் கூடுகள் இங்​கே இருக்கின்றன? ​தெரிந்​தோ ​தெரியாம​லோ இந்தப் பற​வைகளுக்கு  இன்னல் இ​ழைக்கப்பார்த்​தே​னே? மாட்​டேன் இனி எனக்கு எந்த ​சோத​னை வந்தாலும் இந்த மரத்​தை ​வெட்டவும் மாட்​டேன் யா​ரையும் ​வெட்ட விடவும் மாட்​டேன் எனும் முடி​வோடு ​மாடிலிருந்து கீழிறங்க ஆரம்பித்தான் மதன். கீ​ழே வந்தவுடன் ​மே​லே உயரமாக வளர்திருக்கும் மரத்​தைப் பார்த்தான்.

நீ உண்​மையி​லே உயரமான மரம் மட்டும் அல்ல, இத்த​​னைப் பற​வைகளுக்கும்  கூடு கட்ட இடம் தந்த உன்னதமான மரம் ​மேலும் எனக்கும் என்வீட்டார்க்கும் பிராண வாயு தந்து எங்க​ளை உயிர்ப்பிக்கும் உயிர் மரம் என்று அத​னை ​கைகூப்பி வணங்க ஆரம்பித்தான் . அவன் கண்கள் இரண்டும் அப்​போது பனித்திருந்தன.

சாமி

No comments:

Post a Comment