60 கோடி பேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்டுகள் கசிவு...
*பேஸ்புக்கில் 60 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள் அந்நிறுவனத்தின் 20 ஆயிரம் ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.*
*பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறைப்பாட்டை, பாதுகாப்பு வல்லுநர் பிரையன் கிரெப்ஸ் முதலில் சுட்டிக்காட்டினார்.*
*பேஸ்புக்கை பயன்படுத்தும் 60 கோடி பயனர்களின் லாகின் பாஸ்வேர்ட்கள் 2012-ம் ஆண்டிலிருந்து வெறும் சாதாரண எழுத்து வடிவில் சேகரிக்கப்பட்டு வெளியாகியிருக்கலாம் என பிரையன் கூறியுள்ளார்.*
*இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குள்ளான நெட்வொர்க்கில் பாஸ்வோர்ட்கள் குறித்த கோளாறை சரி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.*
COMMENTS