https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 9 March 2019

புதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா

புதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை  நடத்திய உலக மகளிர் தினவிழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து  விளங்கிய 8 பெண்களுக்கு சிறப்பு சேவை விருதுகள் வழங்கப்பட்டன மாற்றுத்திறனாளி ஜி. சசிகலா மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகர் ஞானாலயா ஓய்வு பெற்ற பேராசிரியை டோரதி கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி டி இ எல் சி பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை கிறிஸ்டி செல்வகுமாரி ஓய்வுபெற்ற மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் த பரிமள தேவி மன்னர் கல்லூரி முதல்வர் ஜெ. சுகந்தி சமூக சேவகி அனுராதா சீனிவாசன் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன விருதுகளை வழங்கிய சிறப்பு விருந்தினரான ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி பேசியது பெண்களுக்கு உரிய உரிமையை இன்று ஆளும் ஆண் சமூகம் கொடுத்ததா என்பது இன்னும் முன் நிற்கும்  கேள்வி காதலிக்க, திருமணம் செய்து கொள்ள, சோறு சமைக்க, வீடு பெருக்க, குழந்தை பெற என எல்லாவற்றுக்கும் பெண்கள் வேண்டும் குழந்தை பிறந்தால் ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் நம்முடைய ஆசையாக இருக்கிறது சதி என்ற கொடுமையை நிறுத்துவதற்கு சம்பவம் நடைபெறும் மயானத்தில் உடனிருப்போர் மீதெல்லாம் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று உத்தரவிட்ட பிறகு தான் அந்த கொடுமையை நிறுத்த முடிந்தது ஆண்மை என்பது குழந்தை பெறுவது மட்டுமல்ல மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான் ஆண்மை  எனவே தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக நம்மோடு என்றும் வாழும் பெண்களை ஆண்கள் என்றும் புறக்கணிக்காதீர்கள் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றார் கலியமூர்த்தி விழாவில் ரோட்டரி ஆளுநர் ஆர்.வி.என் கண்ணன் ஆளுநர் நியமனம் எ. எல். சொக்கலிங்கம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் வி. என். சீனிவாசன் எஸ்.சீனிவாசன் செட்டிநாடு பொதுப் பள்ளி நிறுவனர் பி குமரேசன் இணைத் தலைவர் அருண்குமார், பள்ளி முதல்வர் ரமேஷ், சாந்தி குமரேசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, சம்பத்குமார், டாக்டர் எஸ் ராமதாஸ், ஜேம்ஸ், சேது கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன நிறைவாக மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண. மோகன்ராஜ் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது




No comments:

Post a Comment