சிறந்த தலைவருக்கான விருது!!
ரோட்டரி மாவட்டம் 3000தின் சார்பாக 2018 -2019 ஆம் ஆண்டின் விருது வழங்கும் விழா மதுரை தமிழ்நாடு வர்த்தக சங்க ஹட்சன் ஹாலில் விருதுகள் குழு தலைவர் வி .சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர் .வி. என் .கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர் .எஸ். காசிநாதனுக்கு சிறந்த தலைவருக்கான விருதினையும், சிறந்த மக்கள் தொடர்புக்கான விருதினையும் ,சிறந்த சமூக சேவை விருதினையும் ,மக்கள் சேவை தொடர் விருதினையும் வழங்கித் தந்தார் நிகழ்வில் விருதுகள் குழு உறுப்பினர்கள் சரவணன், பெலிக்ஸ் ராஜ், பார்த்திபன், ரமேஷ் முன்னிலை வகித்தனர் விருதினை மக்கள் தொடர்பு இணைச்செயலாளர் மாருதி கண. மோகன் ராஜ், முன்னாள் தலைவர் என்.விஜயராமன், செயலாளர் ஆர் .எம் .துரைமணி, பொருளாளர் ஜி.முருகராஜ் ஆகியோர் இணைந்து விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
படம் : சிறந்த தலைவருக்கான விருதினை ரோட்டரி மாவட்ட ஆளுநர் வழங்கியபோது
COMMENTS