மீனாட்சி அம்மன் திருக்கோயில் கல்யாணம் தற்சமயம் நடைபெற்று வருகிறது அதனுடைய நேரடி காட்சிகளை மீனாட்சி அம்மன் கோயில் வழங்கியுள்ள வலைத்தளத்தின் மூலமாக காணலாம்.
இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org, https://youtu.be/NHUBBSvuiqM ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
அத்துடன், திருக்கோயிலின் முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தில், youtube அலைவரிசையிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
சித்தரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று (மே 4 ) காலை 8:30 மணி முதல் 10:15 மணி வரை நடைபெறவுள்ளது.
COMMENTS