இன்று உலக உணவு தினம்
எல்லோருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என ஆண்டு தோறும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. உணவு வேளை வந்துவிட்டால், நாம் அருகில் இருப்பவர்களிடம் கேட்கும் கேள்வி “சாப்டாச்சா ?"
மனிதர்களில் இதைக் கேட்கக் கூட நாதியற்றவர்களும், வக்கற்ற அடித்தள மக்களும் உண்டு. இதில் மற்ற உயிரினங்களின் கதி சொல்லவே வேண்டாம். சரி ஒரு மறு வாசிப்பாவது செய்வோம்
அக்டோபர் 15ம் தேதி உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுவது ஆச்சரியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
உலக உணவு தினம் - அக்டோபர் 16 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் நாம் உயிர் வாழ அத்தியாவசியமான உணவைச் சிறப்பிக்கும் பொருட்டு கடந்த நவம்பர் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐநாவின் 20வது பொது மாநாட்டில் உலக உணவு தினமாக (World Food Day) பிரகடனப்படுத்தப்பட்டது.
COMMENTS