--> போலி நிறுவனங்கள், ஜிஎஸ்டி கணக்கு மூலம் 4 ஆண்டில் 1,000 கோடி முறைகேடு: பெங்களூருவில் 4 பேர் அதிரடி கைது | Whatsapp Useful Messages

போலி நிறுவனங்கள், ஜிஎஸ்டி கணக்கு மூலம் 4 ஆண்டில் 1,000 கோடி முறைகேடு: பெங்களூருவில் 4 பேர் அதிரடி கைது

போலி நிறுவனங்கள், ஜிஎஸ்டி கணக்கு மூலம் 4 ஆண்டில் 1,000 கோடி முறைகேடு: பெங்களூருவில் 4 பேர் அதிரடி கைது

 சர்க்கரை கம்பெனி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்காக போலி ஜிஎஸ்டி கணக்கு தயாரித்து, ரூ.1,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர், பெங்களூருவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் வரவு - செலவு கணக்குகளை ஜிஎஸ்டி குற்றப்பிரிவு அதிகாரிகள் பரிசீலனை செய்தபோது, 

அதில் அதிகளவில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி பெங்களூரு குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த முறைகேடுகளுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கமலேஷ் மிஸ்ரா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.1000 கோடிக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. 

இதைத் தொடர்ந்து, கமலேஷ் மிஸ்ராவின் கூட்டாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ஜிஎஸ்டி குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு புதிதாக தொடங்கப்பட்ட சில கம்பெனிகளின் வரவு - செலவு கணக்குகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் சர்க்கரை கம்பெனிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் ஜிஎஸ்டி எண்களை ஆய்வு செய்தோம். அப்போது, இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. 

போலி கம்பெனிகள் திறக்கப்பட்டு அந்த கம்பெனி பெயரில் ஜிஎஸ்டி எண்ள் பெறப்பட்டுள்ளது. பிறகு அந்த ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி, மோசடி கம்பெனி பெயரில் வங்கிகளில் கடன்கள் பெறப்பட்டுள்ளது.இதற்காக தனக்கு தெரிந்த நபர்களின் ஆதார் கார்டு, பான் கார்டுகளை பெற்றுக்கொண்ட கமலேஷ், அவர்கள் பெயரில் போலி கம்பெனிகளை உருவாக்கியுள்ளார். 

அதன்பிறகு திட்டமிட்டப்படி பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்கள் பெறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜிஎஸ்டி குற்றப்பிரிவு அதிகாரிகள் முதற்கட்டமாக நடத்திய சோதனையில் கமலேஷ் மிஸ்ரா பெயரில் மும்பை ,டெல்லி உள்பட வெவ்வேறு இடங்களில் 23 போலி கம்பெனிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.

இதுதவிர சர்க்கரை கம்பெனிகள், சீனா உள்பட சில வெளிநாட்டு கம்பெனிகள் பெயரிலும் போலி கம்பெனிகள் உருவாக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது. இதன் மூலம், மொத்த மதிப்பு ரூ.1000 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.வங்கி கடன் பெறுவது இவர்களின் முதல் நோக்கமாகவும், அதன் பிறகு வங்கி கடனை செலுத்தாமல் மோசடி செய்வது போன்ற குற்றங்களில் கமலேஷ் மிஸ்ராவும், அவருடைய கூட்டாளிகளும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 

இந்த கும்பலுக்கு உதவிய அதிகாரிகள் யார்? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: போலி நிறுவனங்கள், ஜிஎஸ்டி கணக்கு மூலம் 4 ஆண்டில் 1,000 கோடி முறைகேடு: பெங்களூருவில் 4 பேர் அதிரடி கைது
போலி நிறுவனங்கள், ஜிஎஸ்டி கணக்கு மூலம் 4 ஆண்டில் 1,000 கோடி முறைகேடு: பெங்களூருவில் 4 பேர் அதிரடி கைது
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/11/4-1000-4.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/11/4-1000-4.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content