இரு வார்டுக்கு ஒரு காய்கறி வண்டி!கோவை மாநகராட்சி ஏற்பாடு
கோவை:ஊடரங்கு சமயத்தில், வீடு தேடி வந்து காய்கறி விற்பதற்கு, வார்டுக்கு இரு வாகனங்கள் இயக்க, கோவை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.இரு வார்டுக்கு ஒரு வாகனம் வீதம், 50 வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. விருப்பமுள்ள காய்கறி வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அனுமதி பெற்று, ஒதுக்கப்படும் வார்டுகளுக்கு சென்று, விற்பனை செய்யலாம்.அனைத்து வாகனங்களிலும், காய்கறி விலை ஒரே மாதிரியாக விற்கப்பட வேண்டும். எந்த விதத்திலும் விலை வித்தியாசம் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை கண்காணிக்கவும், கூடுதல் வாகனம் தேவைப்பட்டால் இயக்கவும், இரு வார்டுகளுக்கு ஒரு பில் கலெக்டர், 20 வார்டுகளுக்கு உட்பட்ட, அந்தந்த மண்டலங்களுக்கு உதவி வருவாய் அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு வார்டுக்கும் காய்கறி வாகனம் செல்வதை, மாநகராட்சி வருவாய் பிரிவினர் உறுதிப்படுத்த வேண்டும்.
COMMENTS