தவறாக பொருள் கொள்ளப்படும் தமிழ் பழமொழிகள்....!!
பழமொழி என்ற பெயருக்கு ஏற்றார் போல் பல அனுபவ மொழிகளை சிறிய சொற்றொடர்கள் மூலம் சொல்லும் வழக்கம் நம்முடைய பண்பாட்டில் இருந்து வருகிறது.
ஆனால் எவ்வாறு சொற்றொடர்கள் சொல்பவரை பொருத்தும் அதனை செவிகொடுத்து கேட்பவரை பொருத்தும் அதனை உள்வாங்கி அடுத்தவருக்கு எடுத்துரைப்பவை பொருத்தும் காலப்போக்கில் அதனுடைய தன்மை சற்றே மருவி வேறு ஒரு அர்த்தத்தை கொள்ளும் அளவிற்கு மாற்றத்துக்கு உட்பட்டு இருக்கிறது.
நாம் நடைமுறை சொல்லி வருவதும் தற்பொழுது மாற்றத்துக்கு உட்பட்டு இருக்கக்கூடிய பழமொழிகளும் அதனுடைய உண்மை அமைப்பையும் நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம்.
1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...!! தப்புங்க தப்பு.... X
"ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு"
இதாங்க சரி...!
2. படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....!!! தப்புங்க தப்பு.... X
சரியானது என்னன்னா ...........!!
"படிச்சவன் பாட்டை கொடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்" இதாங்க சரி...!
3. ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...!! தப்புங்க தப்பு.... X
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
"ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்" இதாங்க சரி...!
4. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....!! தப்புங்க தப்பு.... X
சூடு அல்ல சுவடு...!! சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்புலனாகும்....!!!
"நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு" இதாங்க சரி...!
5. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் கொடை புடிப்பான்....!!! தப்புங்க தப்பு.... X
"அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்" இதாங்க சரி...!
வள்ளல் ஆனவரை கஞ்சனாகமாற்றி விட்டோம் ...!!
காலப்போக்கில்....!!! நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...!?
தொகுத்து வழங்குபவர்,
திருஞான சம்பந்த மூர்த்தி.
#Kaenmin_Unarmin #Tamil_Proverbs #Tamil



COMMENTS