GK in Tamil | தமிழ்க் கேள்வி நேரம் 31 AUG 2021 ;
விடை : விநாயகர்
2. கர்ணனின் வளர்ப்பு தந்தை தாயின் பெயர் என்ன?
விடை : அதிரதன், ராதை
3. இறைவனை உரிமையோடு கிண்டலும் கேலியுமாக செய்து பாடும் முறைக்கு என்ன பெயர்?
விடை : அசதி ஆடல்
4. கரா என்பதன் பொருள் என்ன?
விடை : முதலை
5. நன்னூலார் குறிப்பிடும் உத்திகளின் எண்ணிக்கை எத்தனை?
விடை : 32
6. நன்னூலார் மண், கிளி ஆகியவற்றை எந்த வகை மாணாக்கருக்கு உவமையாகக் கூறுகிறார்?
விடை : இடைநிலை மாணாக்கர்
7. வா. உ. சி அவர்கள் இந்திய சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு எது?
விடை : 1906
8. அழுவம் என்ற சொல்லின் பொருள் யாது?
விடை : கடல்
9. செய்யுளில் ஓரடியில் முதல் இரண்டு மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எவ்வகை தொடை?
விடை : ஒருஉ மோனை
10. உலகம் உவப்ப என தொடங்கும் பத்துப்பாட்டு நூல் எது?
விடை : திருமுருகாற்றுப்படை
11. இது செய்வாயா என்னும் வினாவிற்கு கை வலிக்கும் என்று விடை கூறுவது எவ்வகை விடையாகும்?
விடை : உறுவது கூறல்
12. வேப்பம்பூ மாலை எந்த மன்னர்களுக்கு உரியது என சங்க இலக்கியம் கூறுகிறது?
விடை : பாண்டியர்கள்
13. கூட்டு குப்பைகள் ஒரு புறம் கூட்டும் குப்பைகள் ஒரு புறம் முதலில் எதை கூட்டுவது என்று விளக்கமாக கேட்டது வெளக்குமாறு என்ற இந்த கவிதைக்கு சொந்தக்காரர் யார்?
விடை ; மு மேத்தா
14. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் குரிய இறுதி மூன்று பருவங்கள் யாவை?
விடை : சிற்றில், சிறுபறை, சிறுதேர்
15. உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம் என்று கூறியவர் யார்?
வி டை : திரு வி கல்யாண சுந்தரனார்
16. வள்ளலார் பிறந்தது எப்போது?
விடை : 5:10:1823
17. பாசிமணி இச்சொல்லின் அலகிட்டு வாய்ப்பாடு என்ன
விடை : நேர் நிரை நேர் கூவிளங்காய்
18. எலி, புறா இவற்றின் மரபு ஒலிக்குறிப்பு குறிப்பிடுக?
விடை ; எலி கீச்சிடும், புறா முனகும்
19. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி என்ன?
விடை : இல்பொருள் உவமையணி
20. குணங்குடி மஸ்தான் அவர்களின் இயற்பெயர் என்ன?
விடை : சுல்தான் அப்துல் காதிர்
21. ஆசையே துன்பத்திற்கு காரணம் ஆசையை ஒழித்தால் துன்பத்தை ஒழிக்கலாம் என்ற கோட்பாட்டை கொண்ட சமயம் எது?
விடை : புத்தம்
22. வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா தலை வளஞ்சி சும்மா பாக்குறியே தரையின் பக்கமா வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா என் மனைக்கு வர காத்திருக்கும் நீ என் சத்தமா இந்த வரிக்கு சொந்தக்காரர் யார்?
விடை : மருதகாசி
23. நெஞ்சாற்றுப்படை என்று அழைக்கும் பத்துப்பாட்டு நூல் எது?
விடை : முல்லைப்பாட்டு
24. செய்யுளில் ஓரிடத்தில் நின்று சொல் செய்யுளின் எல்லா சொற்களோடும் சேர்ந்து பொருள் தருவது எவ்வகை அணி?
விடை : தீவக அணி
நன்றி.

COMMENTS