--> மாவட்ட கவுன்சிலா் என்பவர் யார்? | Whatsapp Useful Messages

மாவட்ட கவுன்சிலா் என்பவர் யார்?

 மாவட்ட கவுன்சிலா் என்பவர் யார்?......


எதன் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்?....

சம்பளம்?....

 

சிறு பார்வை....


ஒரு சட்டமன்றத்தில் எப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரோ (MLA) அதேபோல்தான் ஒரு மாவட்ட ஊராட்சி மன்றத்தில் மாவட்ட கவுன்சிலர் ஒரு உறுப்பினர்.


தமிழில் இவரை மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் என்று கூறலாம்.


council - மன்றம்


Councillor -மன்ற உறுப்பினர்.


ஒரு மாவட்டம் பல பகுதிகளாக (வார்டுகள்) பிரிக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பகுதியின் சார்பாளர்தான் (பிரதிநிதி) மாவட்ட கவுன்சிலர்.


மாவட்ட கவுன்சிலர்கள் மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். மாவட்ட ஊராட்சியில் எந்த கட்சி பெரும்பாண்மை கவுன்சிலர்களை பெற்றுள்ளதோ அக்கட்சியிலிருந்து மாவட்ட ஊராட்சியின் தலைவர் தேந்ந்தெடுக்கப் படுவார்.


தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு 3 அடுக்குகளை உடையது.


மாவட்ட ஊராட்சி (மாவட்ட அளவுக்கு)


ஊராட்சி ஒன்றியம் (வட்ட அளவுக்கு)


ஊராட்சி மன்றம் (சிறிய ஊர்கள் அளவில்)


மாவட்ட ஊராட்சி மன்றம் எப்படி மாவட்ட கவுன்சிலர்களால் ஆனதோ அதேபோல் ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய கவுன்சிலர்களால் ஆனது.


அடியில் இருக்கும் ஊராட்சி மன்றத்திற்கு மட்டும் வார்டு உறுப்பினர்களையும் தலைவரையும் மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.


தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்:....


தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் எனப்படுபவை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும்.


தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்காணும் நான்கு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.


 அவை....


1. மாநகராட்சி

2. நகராட்சி

3. பேரூராட்சி

4. ஊராட்சி


--------------------------------------------------


1. மாநகராட்சிகள்: 


தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில்  மாநகராட்சிகள் இருக்கின்றன.


    சென்னை

    மதுரை

    கோயம்புத்தூர்

    திருச்சிராப்பள்ளி

    சேலம்

    திருநெல்வேலி

    ஈரோடு

    தூத்துக்குடி

    திருப்பூர்

    வேலூர்

    திண்டுக்கல்

    தஞ்சாவூர்


இந்த மாநகராட்சிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அல்லது இதற்கு தகுதியுடைய அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து மாநகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.


அவ்வாரே மாநகர்மன்ற தலைவரும்(மேயர்) நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து மாமன்றத்துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவர் மாநகராட்சி மன்றத்துணைத் தலைவராகப் பதவியேற்கின்றார். மாநகர மேயருக்கு அடுத்தபடியாக மாமன்றத் துணைத் தலைவர் செயல்படுவார். 


மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.


--------------------------------------------------

2. நகராட்சிகள்: 


தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். 


நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. 


இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.


--------------------------------------------------

3. பேரூராட்சிகள்: 


இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பேரூராட்சி செயல் அலுவலர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். 


இந்த பேரூராட்சி மன்றதலைவர் மக்கள் மூலமே நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலக ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். 


தமிழ்நாட்டில் மொத்தம் 561 பேரூராட்சிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் பேருராட்சிகளுக்கான ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.


--------------------------------------------------


4. ஊராட்சிகள்: 


தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய அனைத்து ஊர்களையும் அதன் வருவாய்க்கு ஏற்ப அருகிலிருக்கும் சில ஊர்களைச் சேர்த்து ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சிக்கு தலைவரையும் மக்களே நேரடியாகத் தேர்வு செய்கின்றனர். மன்ற உறுப்பினர்களில் இருந்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். 


இந்த ஊராட்சிகளில் தலைவரே நிதி உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் நேரடியாகக் கவனிக்கின்றார். இவருக்கு உதவியாக ஊராட்சி எழுத்தர் பணியில் ஒருவரை அரசு நியமிக்கிறது.தமிழ்நாட்டில் மொத்தம் 12618 ஊராட்சிகள் இருக்கின்றன.


இந்த ஊராட்சி அமைப்புகள் அவை இருக்கும் பகுதிகளில் ஒன்றிணைக்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் எனும் அமைப்பிலும், இந்த ஊராட்சிகள் அனைத்தும் மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எனும் அமைப்பின் கீழும் செயல்படுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.


--------------------------------------------------

5. ஊராட்சி ஒன்றியம்:


 மாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் ஊராட்சி அமைப்புகள் சில சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. 


இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். 


ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அந்தப் பணிகளைத் தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன.


--------------------------------------------------


6. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை:


 தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என்கிற அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு மாவட்ட ஊராட்சிக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 


இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். 


மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரி ஆகியோர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் 32 மாவட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.


சம்பளம்....


வார்டு கவுன்சிலரின் அதிகாரம், சம்பளம் மற்றும் அவர்களால் மக்களுக்கு என்ன செய்யமுடியும்? அரசிடம் இருந்து என்ன நலத்திட்டங்கள் வாங்கித் தரமுடியும் என்று விளக்க முடியுமா?

வார்டு கவுன்சிலர்களுக்கு சம்பளம் ஏதும் கிடையாது. அமர்வுப்படி என்று மன்ற கூட்டம் நடைபெறும் நாட்களில் மட்டும் சொல்ப தொகை வழங்கப்படும். இது உள்ளாட்சி மன்றங்களுக்கிடையே வேறுபடும்.


அதிகாரம் என்றால் தன் பதவியை பயன்படுத்தி தன்னுடைய வார்டுக்கு உட்பட்ட இடங்களில் மேம்பாட்டு பணிகளை மேற் கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்யவும் அதன் மூலம் பணிகளை மேற் கொண்டு பொது மக்களுக்கு சேவை செய்ய முடியும். ஆனால் நடைமுறையில் இவ்வாறு நடப்பதில்லை. கசப்பான உண்மை. ஒவ்வொருவரும் பணம் செலவழித்து தேர்தலில் நின்று வென்று வருவதால் அதை மீட்க முயலுவதாலும் மேலும் சம்பாதிக்க ஆசைப்படுவதாலும் இன்று உள்ள நிலமை வேறு. பதவி அதிகாரத்தை பயன்படுத்தி வேறு பல வழிகளில் சம்பாதித்தவரும் உண்டு.


நன்றி.....

ம. ஞானசேகர், MBA., LLB., IEM.,PGDISM.,

வழக்கறிஞர்/பத்திரிகையாளர்/ ஜோதிடர்/

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம்.

PH. 63790 57475.

COMMENTS

Name

2,189,Budget 2024,2,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,38,Election 2021,154,Election 2024,12,Election results 2024,12,Excel Keyboard Shortcuts,14,Facebook Group Links,1,Gold and Silver Rate,23,ISRO UPDATE,5,kids,18,KOLAM DESIGNS,1,Latest Post,6430,LIVE,53,natrinai,11,pmv,13,price of vegetables,3,RAIL INFO,7,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,6,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Greeting Images,60,Today Special,186,Update,459,Video,17,Whatsapp Group Links,2,அறிந்துகொள்வோம்,525,ஆன்மீகம்,67,இந்திய செய்திகள்,1394,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,514,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,6,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,76,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2349,தினம் ஒரு குறள்,1,தினம் ஒரு திருமுறை,4,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,256,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,37,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,158,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,109,விழிப்புணர்வு,210,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,54,
ltr
item
Whatsapp Useful Messages: மாவட்ட கவுன்சிலா் என்பவர் யார்?
மாவட்ட கவுன்சிலா் என்பவர் யார்?
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2023/08/blog-post_16.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2023/08/blog-post_16.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content