மார்கழி மாத முக்கிய விசேஷ தினங்கள் 2023
17.12.2023 .
மார்கழி 01 ஞாயிற்றுக்கிழமை
தனூர்மாத பூஜாரம்பம்.30 நாட்களும் அதிகாலையில் பெருமாள் கோயில்சென்று தினசரி 30 பாசுரங்கள் படித்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.
18.12.2023 .
மார்கழி 02.
திங்கட்கிழமை சஷ்டி விரதம்.
20.12.2023 . மார்கழி 04ம்தேதி புதன்கிழமை வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி 17.20மணிக்கு மீண்டும் நேர்கதியில் மகரராசியில் இருந்து குமபராசிக்கு செல்கிறார்.
23.12.2023. மார்கழி 07. சனிக்கிழமை சர்வ முக்கோடி வைகுண்ட ஏகாதசி .
24.12.2023 .
மார்கழி 08. ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்.
26.12.2023 .
மார்கழி 10. செவ்வாய்க்கிழமை பௌர்ணமி. ஆருத்ரா அபிஷேகம்(இரவில்)
27.12.2023 .மார்கழி 11. புதன்கிழமை. ஆருத்ரா தரிசனம்.
30.12.2023.
மார்கழி 14. சனிக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. அகத்தியர் ஜெயந்தி.
02.01.2024 .
மார்கழி 17. செவ்வாய்க்கிழமை சஷ்டி விரதம்.
09.01.2024 . மார்கழி 24.
செவ்வாய்க்கிழமை.பிரதோஷம்
11.01.2024 . மார்கழி 26. வியாழக்கிழமை. அமாவாசை. ஶ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி.
12.01.2024 . மார்கழி 27. வெள்ளிக்கிழமை. கூடாரைவல்லி.
இன்று அதிகாலை பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்று தொடங்கும் பாடலை இருமுறை பாட திருமண பாக்கியமும்,தொழில் வெற்றியும் ஏற்படும்.
13.01.2024 .
மார்கழி 28. சனிக்கிழமை திருவோண விரதம்.
14.01.2024
மார்கழி 29. ஞாயிற்றுக்கிழமை போகிபண்டிகை
COMMENTS