விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைனில் ரயிலின் வேகத்தை 110 கிலோ மீட்டராக தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை முதல் தஞ்சாவூர் வரை உள்ள வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்க போகிறது.
திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைன் பிரிவில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இருக்கின்றன.
இந்த வழித்தடத்தில் சோழன் விரைவு ரெயில், செந்தூர் விரைவு ரெயில், உழவன் விரைவு ரயில், மன்னை விரைவு ரெயில் மற்றும் சென்னை எழும்பூர்-காரைக்கால், தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில், மன்னார்குடி-பாகத் கி கோதி, மன்னார்குடி-திருப்பதி, ராமேஸ்வரம்- திருப்பதி, ராமேஸ்வரம்-புவனேஸ்வர், ராமேஸ்வரம்- பனாரஸ், காரைக்கால்-மும்பை உள்பட நிறைய விரைவு ரயில்கள் போகின்றன.
மொத்தம் 175 கி.மீட்டர் தூரம் உள்ள விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைன் பிரிவில் இதுவரை அனுமதிக்கப்பட்ட வேகமான மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்திற்கு பதில், 110 கி.மீட்டராக அதிகரிக்க தெற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலகத்தில் இருந்து திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு தகவல் வந்துள்ளது.
எனவே 175 கி.மீட்டர் தூரம் உள்ள விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைன் பிரிவில் விரைவில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

COMMENTS