பம்பை நதியை பற்றி தெரிந்தும் தெரியாததும் சில அரிய தகவல்கள் 💯 🙏
பம்பை நதி மகிமை 🌊 🌊
பம்பை நதியின் மகிமையைப் புரானங்களாக விரித்துச் சொல்லும் அளவிற்கு அது தண்ணிடையே ஒரு தெய்வீக மகத்துவத்தை கொண்டுள்ளது .
பித்ருக்கள் எபோதுமே வாசம் செய்கின்ற திருத்தலங்கள் மிகச் சிலவே. ராமேஸ்வரம் அக்னிதீர்தம், திருவிடைமருதூர் கோவில் திருக்குளம், வாரணாசி கங்கை நதி தீர்த்தம், பத்ரிநாத் பிரஹ்ம கபால பாறை, கும்பகோணம் சக்கரப் படித்துறை, வேதார்ன்யம் தீர்த்தம், திருவாரூர் அருகே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே தர்பணம் செய்த திலதைப்பதி எனப்படும் கோயில்பத்து, திருவண்ணாமலை, ராமநாதபுரம் அருகே நவபாஷாணம் ( தேவி பட்டினம் ) போன்ற திருதலங்களுடன் பம்பை மகா நதியும் பித்ருக்கள் நித்ய வாசம் செய்கின்ற முக்கியமான இரைதலங்களுள் ஒன்றாக விளங்குகின்றது .
பம்பை நதி இவ்வகையில் தனி மகத்துவம் பெறுவதற்கு காரணமென்ன ?
ஸ்ரீ ஐய்யப சுவாமியே தினமும் நீரடுகின்ற மகா புண்ணிய நதியல்லவா ? மேலும் எத்தனையோ அறிய மூலிகைகள் கலந்த புனிதமான தெய்வத் தன்மையையும் தன்னுள் கொண்டுள்ளதே பம்பை நதி தீர்தமாகும். பம்பை நதியின் இருபுறங்களிலும் மணல் மேடுகளை நிர்மானிதவர்களே பித்ருதேவர்கள்தாம். இது மட்டுமா ? பசு, யானை, புலி, எருமை, ஆடு என பலவிதமான விலங்கினங்கள் தங்களுடைய தாய்ப்பாலை பூமாதேவி க்கு அர்பணித்து புண்ணிய நதியில் கரைத்த மகத்துவத்தையும் தன்னுள் கொண்டதல்லவா பம்பை நதி ?
கோடிக்கணக்கான வன தேவதைகள் உறைகின்ற காடுகள் பல உண்டு . இப்பூலகில் இந்த வன தேவதைகளின் அருள்ளால்தான் நமக்கு மழை பொழிவுகள் ஏற்படுகின்றன. தாவர வளம் உண்டாகின்றது. நிழல் கிட்டுகின்றது. மேலும் பசுமையான நல்லேண்ணங்களும் உருவாகின்றன. வனதேவதைகளே தமுடைய தெய்வீகச் சக்தியை ஊட்டுகின்ற தன்மையைக் கொண்டதும் பம்பை நதிதானே !
இது மட்டுமா ? பித்ரு லோகங்களில் வசிக்கின்ற கோடானு கோடி வசு, ருத்ர, ஆதித்ய, பித்ரு தேவர்கள் எல்லோரும் பூலோகத்திற்கு தினந்தோறும் வந்து செல்கின்ற இரைதலங்களுள் பம்பை நதியும் ஒன்று ! இங்குதான் அவர்கள் தங்களுடைய புனித நீராடல் மேற்கொண்டு எத்தனையோ வகையான பிரயசித்தங்களைத் தம் சந்ததியனர்க்குகாக மேற்கொள்கின்றன !
இதனால்தான் பம்பை நதிக் கரையில் தர்பணம் செய்வதுன்பது மிகவும் அரிய பாக்கியமாக இன்றும் என்றும் விளங்குகின்றது. அனைவருக்கும் எளிதில் கிடைபதல்லவே இந்த பம்பை நதி தீர்த்த தர்பணம் !
பம்பையின் தெய்வீக மூலிகா சக்தி .
பம்பை நதி நீரானது தன்னுள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து பல அரிய மூலிகைச் சக்திகளை கொண்டுள்ளது. புள், சிங்கம், கரடி போன்றவை மனிதர்களைக் கொன்று தின்கின்ற குணங்களைக் கொண்டு இருந்தாலும் கூட அவற்றிடம் உள்ள பல அரிய தெய்வீக சக்திகள் நம்மிடையே இல்லை. புலி, சிங்கம், கரடி, யானை இவைகளுக்கு கூட சில தியான நிலைகளுண்டு.
நமக்குக் கிடைக்காத பல மூலிகைகள் எல்லாம் தினமும் டன் கணக்கில் உண்கின்றன யானையின் உடலில் எத்தகைய மூலிகை சக்தி நிறைந்திருக்கும் என்று நீங்களே சற்று சிந்தித்து பாருங்கள். கரடி, சிங்கம், புலி கூட தாங்கள் உண்கின்ற விலங்குகளின் உடலில் உள்ள விஷத் தன்மைகள் தங்களை தாக்காமல் இருப்பதற்காக சில அரிய மூலிகைகளை மென்று தின்கின்றன. பூனை, நாய் போன்றவை அருகம்புல்லை மற்றும் சில அரிய மூலிகைகளைக் கடித்து மென்று தின்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா ? எனவே விலங்கினங்கள் கூட மூலிகைகளின் தெய்வீக சக்தியை நன்கு புரிந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் இதனை அறிந்த மனிதனோ மிகச் சிறந்த மூலிகையான கருவெப்பலையையோ புதினா கீரையை சாப்பிடம்பொழுது எடுத்து எரிந்து விடுகின்றான். மூலிகைகளை உணவோடு சேர்த்து உண்பதுதான் முறையே தவிர அவற்றைத் தூக்கி எறிந்தால் சாபங்ள்தான் ஏற்படும். வெறும் சாபங்கள் சாபங்கள் என்று பயமுறுத்துகிறோம் என்று எண்ணாதீர்கள். எந்த ஒரு நல்ல பொருளையும் நன்முறையில் பயன்படுத்துவதற்கு தான் இந்த மனித வாழ்வு !இப்படி இருக்கும்பொழுது கிடைத்த ஒரு நல்ல பொருளைத் தூக்கி எறிவது, விராயமாகுவது என்றால் நிச்சயமாக சாபம்தானே ?
பம்பை நதி மிகவும் சக்தி வாய்ந்த மூலிகா பந்தனங்களைத் தன்னுள் கொண்டதோடு அல்லமால் க்ஷீராம்ருதம் எனப்படும் அற்புதமான பால் சக்தியையும் தன்னுள் கொண்டுள்ளது.
மணிகண்டன் ஆக ஸ்ரீ ஐய்யப சுவாமி கொண்டு வந்த புலிப் பாலில் உள்ள தெய்வீகச் சக்தி என்ன ? தற்போது ஒற்றை தலைவலி என்று சொல்கின்றோம். இவ்வாறு கபாலத்தில் ஏற்படுகின்ற பலவிதமான கொடிய நோய்களுக்கு மாமருந்தாக விளக்குவதே புலிபாலாகும். ஆனால் புலிபாலை கொண்டு வர முடியுமா ? இதுதானே விஞ்ஞான மயமான கேள்வி ?
இன்றைக்கும் யானையின் தந்ததில் உள்ள தெய்வீக யோக சக்தியையும், மகிமையையும் உணர்ந்து கொள்ளாமல் அதனைக் கேரம் போர்டு ஸ்ட்ரைக்கர், வீட்டிற்குப் பல்வேறு அலங்காரப் பொருட்களாகவும் மாற்றி எத்தனையோ யானைகளை வீழ்த்திப் பெரும் பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இதே போலத்தான் புளிபாலின் மகிமையையை இந்த மனித குலம் உணரத் தொடங்கினாள் நாளைக்கே உலங்கெங்கும் உள்ள புலிகளை வீழ்த்தி புளிபாலை எடுத்து சுய நலத்திற்காக வீட்டில் வைத்து விடுவார்கள் ! அதனால்தான் எதையுமே தெய்வீக ரகசியமாக வைத்து நன்முறையில் போற்றி வந்தார்கள் நம் பெரியோர்கள்.
ஆமாம், புளிபால், யானைபால் போன்ற விலங்குகளின் க்ஷீர அமிர்த சக்தி நம் மனித குலத்திற்கு தேவையானால் என்ன செய்வது ? எப்படி அதனைப் பெறுவது ? மனித குலத்தை தவிர அனைத்து விலங்கினங்களும், புழு பூச்சிகளும், தாவர இனங்களும் இதனை நன்கு உணர்ந்து இவ்வரிய சக்தியை பம்பை நதி மூலமாகப் பெறுகின்றன.
பம்பையில் தர்ப்பணம் .
தற்போது விரதம் பூண்டு சபரிமலை செல்வோர் பம்பை நதியில் நீராடுவதோடு நிறுத்தி விடுகின்றார்களே தவிர இங்கே பித்ரு தர்ப்பணத்தைச் சரிவரச் செய்வது இல்லை. பம்பையில் பித்ரு தர்ப்பணம் செய்வதற்கே பலவிதமான யோயதாம்சங்கங்களும் உண்டு. எவ்வாறு ஸ்ரீ ஐய்யபணை தரிசிபதர்க்கு நாம் பல விறத நெரிகளைக் கடைபிடிக்கின்றோமோ அதேபோல பம்பை நதி தீர்த்தத்தில் தரப்பணம் செய்வதற்கான சில வழிமுறைகளும், விரத முறைகளும் உண்டு. இதனை குருவாய்மொழியாக கேட்டு பரிபூரணமாக கடைபிடித்தால் இதனால் நிச்சயமாக நம்முடைய பித்ருகளுக்கு அரிய பல இரைநிலைகள் கிட்டுகின்றன.
நாம் ஒரு ஜென்மம் ஏடுதுவிட்டோம். இந்த மனிதப் பிறவியில் நாம் செய்கின்ற சில நற்காரியங்களால் மேலும் பல தெய்வீக நிலைகள் நம் பித்ருகளுக்கு கிட்டுமேயானால்
அதைவிடப் பெரும் பாக்கியம் நமக்கு என்ன இருக்கின்றது ? நம்மை நாம் கடைத்தேற்ற முடியுமோ இல்லையோ, நம் பித்ருகளாவுது பல உத்தம இறை நிலைகளை அடைவதற்காக வழிபாடுகளை கடைப்பிடிக்கலாம் அல்லவா ? இதற்காகத்தானே இந்த மனிதப் பிறவி எடுத்தோம் ! நம்முடைய மூதாதையர்களான பித்ருக்கள் நாம் செய்யும் பூஜைகளால் அற்புதமான தெய்வீக நிலைகளை அடைவார்களேயானால் அதைவிட மேலான பிறவிப் பயன் நமக்கு வேறென்ன இருக்க முடியும் ? இதற்காகவே நாம் வாழ்ந்திடலாமே ?
க்ஷீர தர்ப்பணம் .
தர்ப்பணம் முறையிலே க்ஷீர தர்ப்பணம் என்று ஓர் அற்புதமான பூஜையுண்டு. இம்முறையில் நீருக்கு பதிலாக பால் தாரையாக அளிக்கப்படுகிறது. இதனைக் குறித்த சில விஷேச தினங்களில் செய்தால்தான் க்ஷீர தர்ப்பணத்தின் பரிபூரணமான பலன்களைப் பெற முடியும். பம்பை நதி ஸ்ரீ ஐய்யப சுவாமிகளின் அவதாரதிர்க்கு முன்னரே ஏற்பட்டதென்றால் இதன் சிறப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா ?
நீர், பசுஞ்சாணம், யானைச்சானம், புளிப்பால், நத்தைச் சுவட்டு சுண்ணாம்பு பஸ்ம சக்தி, பெறற்கரிய கந்தக சக்தி, கூர்ம ஆமல கூட்டு பஸ்ம சக்தி போன்ற எத்தனையோ தெய்வீக அற்புதங்களை தன்னுள் கொண்டு உள்ளதே பம்பை நதியாகும்.
தன்னுடைய தாயின் தீராத தலைவலி தீருவதற்காகப் புளிப்பாலைக் கொண்டு வந்து ஸ்ரீ ஐய்யப சுவாமி அப்புலிப்பாலை என்ன செய்தார் ? இது பற்றிச் சித்புருஷர்களின் சிறந்தங்கள் நன்கு விளக்குகின்றன. ஸ்ரீ ஐய்யப சுவாமியின் அன்னையானவள் அரசப் பட்டத்திலிருந்து ஸ்ரீ ஐய்யப சுவாமியை விளக்குவதற்காக எவரும் பூலோகத்தில் செய்திடாதா புது விந்தையாக ' புளிப்பாலைக் கொண்டு வரச் செய்து ஸ்ரீ ஐய்யபனின் சகாப்தத்தை முடித்து விடலாம் ' என்று எண்ணினாள். ஆனால் இதன் பிறகு நடந்ததை நாம் அறிவோம்.
இரைமூர்திகளுடைய வாகனங்களாய் அமைந்த சிங்கம், புலி, யானை, சேவல், மயில், நந்தி, காமதேனு, மூஷிகம் போன்றவை அனைத்தும் அரும்தவம் புரிந்த. மகரிஷிகளின் ரூபங்களே ! எனவே தான் இறைவன் இவற்றைத் தம் வாகனங்களாகக் கொண்டுள்ளான். ஸ்ரீ ஐய்யப மூர்த்தி புளிப்பாலுடன், பசும்பால், பஞ்ச்கவ்யம் போன்றவற்றைச் சேர்த்து மகரிஷிகளின் மந்திர பூஜையுடன் பம்பை நதி தீர்தப் பகுதியில் தெளித்து அதற்கு க்ஷீராம்ருத சக்தியைத் தந்தார். இதனால் பம்பை நதியில் நீராடுவோரின் தேகத்திற்கு நோய் தீண்டாச் சக்தியும், தோஷங்கள் அண்டாத வல்லமையும் கிட்டும். இவ்வாறாக பம்பை நீராடல் மூலம் நாம் புளிப்பாலின் தெய்வீகச் சக்தியை பெறலாம்.
ஸ்ரீ ஐய்யப சுவாமியே பம்பை நதி தீர்த்தத்தில் தர்ப்பணம் அளித்தார் என்றால் கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது அல்லவா ? மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவானே தனது மூதாதையர்களுக்குப் பித்ரு தர்ப்பணம் அளிக்கின்ற நிகழ்ச்சியைப் படித்திருக்கிறோம். என், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே தன் தந்தையாகிய தசதரருக்கு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திளதைப்பதி எனப்படும் கோயில்பத்து திருதலத்திலே தர்ப்பணம் அளிதிட்டாரெ !
எனவேதான் வருடம்தோறும் தன்னுடைய தாயோ, தந்தையோ இறந்த திதியில் திவசம் அளிகின்றவரகள் மாதந்தோறும் அந்த குறிப்பிட்ட திதியிலே திலதைப்பதி திருதலத்திலே தர்ப்பணம் அளித்து இயன்றால் மாத திவசமும், தான தர்மமும் குறிப்பாக, தங்கள் மூதாதையர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை அன்னதானமாகச் செய்வார்களேயானால் அது மிகச் சிறந்த பித்ருதோஷ நிவர்த்தியாக அமைகின்றது. இதனால் விட்டுப்போன பல திவச திதிகளுக்கும், சிரார்த்த திதிகளில் முறையான மந்திரங்களை ஒதி ஹோமங்கள்ளைச் செய்யாமைக்குமான பிராயச்சித்தங்களையும் இதன் மூலம் பெற்றிடலாம். சந்ததி தழைக்க உதவும் பூஜை.
சாகம்பரிய விரதம்
வாரம்தோறும் ஏதேனும் ஒரு நாளில் பச்சைக் காய்கணிகளை மட்டும் உண்டு, துளசி நீரை அருந்தி சாகம்பரிய விரதம் என்னும் ஓர் அற்புத விர்தத்தைக் கடைபிடிக்க வேண்டும். இது மிகவும் எளிமையானது தான். இது நல்ல ஆரோக்கியத்தை அளிப்பது மட்டுமல்லாமல் பச்சைக் காய்கறிகளில் உள்ள சில மூலிகைச் சக்திகளை தெய்வீகச் சக்திகளாக நமக்கு அளிக்கின்றது. சாகம்ருத சாகம்பரிய விறதமானது தேவலோகத்தில் இன்றும் பல மகரிஷிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அக்காலத்தில் பல பர்ணசாலைகளில் இந்த சாகம்பரிய விரதம் மிகவும் சிறப்பான விரத முறையாகப் பொற்றப்பட்டதுடன் பல புண்ணிய நதி தீர்தங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் முன்னர் இவ்விரதத்தை கடைபிடிப்பதும் வழக்கமாக இருந்தது.
எனவே பம்பை நதியில் முதன் முதலாக பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்புபவர்கள் முதலில் இந்த எளிய சாகம்பரிய விர்தத்தைக் கடைப்பிடித்திடல் வேண்டும். இன்றைக்கும் பல இடங்களில் திவசத்தை நடத்தித் தருவதற்கான தான தருமப் பொருட்களில் வாழைக்காய், பச்சரசி, புடலங்காய் அல்லது நெல் போன்ற பச்சைப் பொருட்களை தானமாக அளிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அரிசியும் நெல்லும் கூட பச்சைத் தாவரமாக அமைவதால் பித்ரு தர்பபண நாட்களிலும், அமாவாசை தினங்களிலும் இவற்றை தானமாக அளிப்பது மிகவும் விஷேசமானதாகும்.
பச்சைக் காய்கறிகளில் பித்ரு தெய்வீக சக்தி மிகுந்த காணப்படுகின்றது. காரணம் என்னவெனில் பித்ருக்கள் தங்களோடய பூலோக பூஜைக்காக பிரம்ம நேரத்தையும், அபிஜித் முகூர்த்தம் எனப்படும் பகல் உச்சிப் பொழுதையும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே பல தாவரங்களின் மொட்டு காயாகும் நேரமாகும். எனவேதான் சில வகையான பித்ரு தர்ப்பணங்களை அளிப்பதற்கு பிரம்ம முகூர்த்த நேரமும் உச்சி கால நேரமும் சிறப்புடையதாக இன்றும் விளங்குகின்றது.
ஸ்ரீ ஐய்யப சுவாமி பம்பை நதிகரையிலே தம் மூதாதையர்களுக்கு மட்டுமல்லாமல் தேவாதிதேவ மூர்த்திகளுக்கும் பித்ரு தர்ப்பணம் அளித்து பல மகரிஷிகளுக்கும், யோகியருக்கும் நல்வழி காட்டினார். இதற்கு க்ஷீராம்ருத தர்ப்பணம் என்று பெயர். மேற்கண்ட வகையில் சாகம்பரிய விரதத்தை ஒரு வருட காலத்திற்குப் பூண்டோரே க்ஷீராம்ருத தர்ப்பண பூஜையை கடைபிடிப்பதற்கான தகுதியைப் பெறுகின்றனர். இது படிபதற்குச் சற்று கடினம்போல் தோன்றினாலும் மிக எளிமையான முறையிலே இந்த ஒரு வருட கால விறதத்தைக் கடைபிடித்து விடலாம். இதனால் கிட்டுகின்ற கோடானுகோடி பலன்களைப் பார்கின்றபோது இவெளிய விரதத்தை மேற்கொள்வது சுலபம் தானே ?
ஏனென்றால் அறிந்தோ அறியாமலோ இத்தனை ஆண்டுகளாக நம்முடைய இருபத்தி நாலு தலைமுறைகளுக்கு உரித்தான மூதாதையர்கள் அனைவருக்கும் நாம் தர்ப்பணம் அளிக்கவில்லை. அமாவாசை தோறும் அளிக்கின்ற தர்ப்பணம்கூட முறையான மந்திரங்குளடன் தான தர்மங்களுடன் அமையமைனால் அதுவும் அரைகுறையான பலன் களைத்தான் தருகின்றது. மேலும் இருபத்தி நாலு தலைமுறைகளுக்கு அர்க்யமும் தர்ப்பணமும் அளிக்கின்ற தர்ப்பண முறையானது மாறி, பன்னிரெண்டு தலைமுறைகளுக்காக தற்போது விளங்கி, அதுவும் ஆறு தலைமுறைகளுக்கு உரித்தானதாக பல இடங்களில் குறைந்துவிட்டது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். எனவே இவ்வாறு விட்டுப்போன பல தர்ப்பண முறைகளுக்கும் பரிகாரமாக, முறையாக மந்திரங்களை ஓதி பித்ரு ஹாமங்களை செய்யாமைக்குமான பிராயச்சித்தமாக பம்பை நதிக் கரையிலே செய்யப்படுகின்ற க்ஷீராம்ருத தர்ப்பணமே அமைகின்றது.
பம்பையில் நீராடும் முறை .
பம்பை நதியில் நீராடுகின்ற முறையை நாம் அறிய வேண்டும். ஸ்ரீ ஐயப்ப சுவாமியே இப்புண்ணிய நதியில் மலஜலம் கழுவது போன்ற அறியாமையால் செய்கின்ற தவறுகளை கண்டிப்பாகக் தவிர்க்க வேண்டும். முறையான வழிபாடுகளை முடித்த பின்னர்தான் அதுவும் ஒரு தனி குடுவையில் / வாளியில் நீரை எடுத்துச் சென்று சுத்தம் செய்து கொள்ளலாம். நதியில் நேரடியாக கை கால்களை, கழிப்பு, காம உறுப்பு அவயங்களைக் கழுவதுள் கூடாது. நதியைக் பார்த்த உடனேயே கை கால்களை கழுவிக்கொண்டு சிரசில் நீரை தெளித்துகொண்டு அவசரக் கோலத்தில் பம்பை நதியில் நீராடக் கூடாது. பம்பை நதியைக் கண்டவுடன் கையெடுத்து கும்பிட்டு வணங்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்திடல் வேண்டும். ஏனென்றால் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் புனிதமான திருவடிகள் பட்ட நதி படுகையல்லவா ?
ஸ்ரீ ஐயப்ப சுவாமி பித்ரு தர்ப்பணம் அர்க்யமும் அளித்த தினமே அமாவாசையும் திருஓண நட்சத்திரமும் சேர்ந்த திருநாளாகும். எனவே மேற்கொண்ட ஒரு வருடகால சாகம்பர்ய விறதத்தைப் பூர்த்தி செய்தவர்கள் அமாவாசையும் திருஓண நட்சத்திரமும் சேர்கின்றன நாள்வரை காத்திருந்து அந்நாளில் பம்பை நதிக்குப் புனித யாத்திரை சென்று அங்கு க்ஷீர அமிர்த தர்ப்பணதைச் செய்திடல் வேண்டும்.
க்ஷீரம் என்றால் பால் பொருள். அமிர்தம் என்றால் தேன். எனவே ,க்ஷீராம்ருத தர்ப்பண பூஜை என்றால் தேன் கலந்த பாலைக் கொண்டு பித்ருகளுக்கு அர்க்யமும் தர்ப்பணமும் அளித்தல் என்பது பொருளாகும்.
முதலில் பம்பை நதியை வணகியவுடன் அரசு, ஆல், வேம்பு, பலா போன்ற ஹோம சமித்து மரக் குச்சிகளால் நீரைக் தொட்டு சிரசிலும் உடலிலும் தெளித்துகொள்ள வேண்டும் அல்லது அரசு, ஆல் இலைகளினால் தொண்ணை செய்து அதில் நீரை முகர்ந்து ' ஸ்ரீ ஐயப்பன் திருவடி சுமந்த பம்பை நதியே போற்றி ! ' என்று ஓதியவாரே புனித நீரை தலையிலும் உடர் பகுதிகளிலும் தெளித்துகொள்ளவெண்டும். இதன் பிறகு நீரில் இறங்கி நீராடுதல் வேண்டும்.
இவ்வாறு பம்பை நதியில் நீராடிய பின்னரே க்ஷீராம்ருத தர்ப்பண பூஜை துவங்குகிறது.
பாம்பைக் நதிக்குச் செல்லும்போதே சுத்தமான பசும் பாலையும், தேனையும் எடுத்துச் செல்லுதல் நலமாகும். பம்பை நதிக் கரையில் தரப்பைச் சட்டத்தைச் விரித்து அதன் மேல் தேன் கலந்த பால் ஊற்றி பிறகு எள் கொண்டு வழக்கமான முறையில் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளித்திட வேண்டும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு வருட காலம் எவர் சாகம்பரிய விரதம் மேற்கொண்டு வருகிறாரோ அவருக்குத்தான் பம்பையில் க்ஷீராம்ருத தர்ப்பணதைச் செய்கின்ற யோக்யதாம்ச பாக்யம் பரிபூரணமாக அமைகின்றது. ஏனோதானோ என்று இதனைச் செய்தல் கூடாது !
இந்த நதிக் கரையில் வெறும் தர்ப்பணம் செய்வதைவிட அதர்க்குறித்தான சாகம்பரிய விரதத்தை மேற்கொண்டு தர்ப்பண பூஜையை நிறைவு செய்வதுதான் நன்மை பயக்கும். இதிலும் அமாவடையுடன் திருஓண நட்சத்திரம் சேர்கின்ற திருநாளே பம்பை நதிக்கரையில் தர்ப்பணம் அளிப்பதற்கான மிகவும் விசேஷமான தினம் என்று சித்புருஷர்கள் அருள்கின்றனர்.
பொதுவாக, நம்முடைய இருபத்துநான்கு தலைமரைகளில் ஆன் வர்கத்தைச் சேர்ந்த பித்ருகளுக்கு திரு ஓண சேர்கின்றன அமாவாசை தினமே சிறப்புடையதாகும். இதேபோல உத்திராட நட்சத்திரம், அமாவாசை சேர்க்கின்ற நாளே பெண் வர்கத்தினருக்கு உரித்தான பித்ருகளுக்கான க்ஷீர அம்ருத தர்ப்பணம் அளிக்கின்ற விசேஷ தினமாகும். இவ்விரண்டு நாட்களிலும் ஒருவன் தன் வாழ்நாளில் பம்பை நதிக் கரையில் க்ஷீர அம்ருத பித்ரு தர்ப்பணம் செய்கின்ற பாக்யத்தைப் பெற்றுவிட்டால் உண்மையாகவே இது வாழ்நாளில் கிடைக்கின்ற மிகப்பெரிய பாக்கியமாகும்.
இத்தகைய தெய்வத்திரு நிகழ்ச்சியானது பம்பை நதிக்கு மட்டுமே உரித்தானகையால் பம்பை நதியின் மகத்துவமும் உன்னதமும் பெருகுகின்றது.
நன்றி 🙏
ஸ்ரீ அகஸ்திய விஜயம்
ஆன்மீகப் மாத இதழ் .
🙇🙇🙇🙇🙇
🙏🙏🙏🙏🙏

COMMENTS