திருச்சி திருவரம்பூரில் கட்டுமானப் பொருட்கள் – பர்னிச்சர் எக்ஸ்போ சிறப்பாக நடைபெற்றது
திருச்சி திருவரம்பூர் பகுதியில், வியாழக்கிழமை நடைபெற்ற பெல்ட் மெட்டீரியல் மற்றும் பர்னிச்சர் எக்ஸ்போ விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்நிகழ்வை ஒருங்கிணைந்த கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார்கள், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்கப்பட்டது.
புதிய காலத்திற்கு ஏற்ப வீட்டுவசதி மற்றும் வணிக வளாகங்களில் பயன்படும் பெல்ட் மெட்டீரியல்களும், பல்வேறு வகையான பர்னிச்சர்களும் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய தொழில்நுட்ப நிபுணர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
COMMENTS