திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
டிச.3ல் நெல்லையில் இரவு 9.30க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30க்கு திருவண்ணாமலை சென்றடையும். டிச.4ல் திருவண்ணாமலையில் இரவு 7.55க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30க்கு நெல்லை சென்றடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.3, 4ம் தேதிகளில் வட்டப்பாதை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன. சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தாம்பரம் வழியாக ரயில் இயக்கப்பட உள்ளது. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நவ.30, டிச.3, 4, 5ம் தேதிகளில் காலை 10.10க்கு ரயில் புறப்படும்.
COMMENTS