நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றல் நகை திருட்டுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
எஸ்எஸ் காலனி புறவழிச்சாலை பகுதியை சேர்ந்த சுஜா சங்கரி என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றம் கிளையில் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், கடந்த நவம்பர் 2015 அன்று அவர் வீட்டை உடைத்து சுமார் 75 பவுன் நகை மற்றும் ரூ.1,39,000 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக இழப்பீடு பெற்று தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபுடிக்க முடியவில்லை என்றல் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார். மேலும் திருட்டு வழக்கில் கண்டுபுடிக்க முடியாத வழக்குகளை விசாரணை நடத்தி கண்டுபிடிப்பதற்கான திறமைமிக்க காவல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு காவல் பிரிவை மாவட்டம் தோறும் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். திருட்டு வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வழக்குகளின் நிலவரம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஏடிஎஸ்பி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
COMMENTS