🌧️ வடகிழக்கு பருவமழை 2026 கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கணிப்பு:
தமிழ்நாட்டின் மழைப்பொழிவு எப்படி இருக்கும்?
வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை 2026 காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவில் வேறுபாடுகள் காணப்படலாம். ஒரு சில இடங்களில் கன மழையாகவும் ஒரு சில இடங்களை தவிர்த்தும் மழைப்பொழிவு இருக்கும்
🔶 வடக்கு தமிழ்நாடு
சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் இயல்பானது முதல் சற்று குறைவான மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
🟡 மத்திய தமிழ்நாடு
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவு கிடைக்கக்கூடும்.
🔵 கொங்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு
கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இயல்பானது முதல் இயல்பை விட அதிகமான மழை கிடைக்கக்கூடிய சூழல் காணப்படுகிறது.
🔴 தென் தமிழ்நாடு
மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு கிடைக்கக்கூடிய பகுதிகளாகக் கணிக்கப்பட்டுள்ளன.
🟢 கேரளாவின் மற்றும் இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
📌 ஒட்டுமொத்தமாக:
2026 வடகிழக்கு பருவமழையில் தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிக மழை, மத்திய தமிழ்நாட்டில் இயல்பான மழை, அதேசமயம் வட தமிழ்நாட்டில் இயல்பானது முதல் சற்று குறைவான மழை என்ற மண்டல வேறுபாடு காணப்படலாம்.
🌧️ இது பருவமழைக்கான நீண்டகால முன்னோட்டக் கணிப்பு.
நன்றி - ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast

COMMENTS