தவளை தன் வாயால் கெடும்,
மனிதன் தன் நடத்தையால் கெடுவான்...!!
தவளையானது மழை தண்ணிர் நிரம்பி இருப்பதை பார்த்து, தன் மிகுந்த சந்தோஷத்தை, தன் வாயின் சத்தத்தின் மூலம் வெளிப்படுத்தி, தன் எதிரியாக பாம்புக்கு தன்னை வெளிப்படுத்தி மாட்டிகொண்டு பலியாகின்றது...!!!
இதற்கு முன்பு அந்த தவளை அமைதியாக இருந்தது போலவே, மழைக்கு பின்பும் அமைதியாக இருந்து இருந்தால், அந்த தவளை மகிழ்ச்சியாக இருந்து இருக்கும், தன் எதிரியாக பாம்பிடம் தப்பித்தும் இருக்கும்...!!
இதேபோல தான் மனிதர்களாகிய நாமும் இருக்கின்றோம், குறைவான வாழ்க்கை, போதுமான வாழ்க்கை வாழும் பொழுது, கொஞ்சம் சரியாக, அமைதியாக ஆனவத்திலும், பெருமையிலும் ஆடாமல் வாழ்ந்துகொண்டு வருகின்றோம்..!!.
ஆனால் கொஞ்சம், பணமும்,அதிகாரமும், பதவியும்,ஞானமும் கிடைத்தது விட்டது என்றால் அகங்காரமும்,ஆணவமும்,பெருமையும் நமக்குள் தலை தூக்கி ஆடுகின்றது..!!
நாமும் அந்த தவளை போலவே தன் வாயினாலும் கிரியையினாலும் நம் ஆணவத்தை,பெருமையை வெளிப்படுத்தி சாத்தானாகிய நம் எதிரிக்கு அழைப்பு கொடுத்து விடுகின்றோம். பின்பு நமக்கு துன்பத்தையும் வேதனையும் விளைவித்து கொள்கின்றோம்...!!!
பணம், பதவி, அதிகாரம், ஞானம் என்பது இல்லாத போது, நாம் எப்படி ஆணவம், பெருமை இல்லாமல் அடக்கமாக இருந்தோமோ, அப்படியே, அவைகள் வந்த பின்பும் நாம் இருந்தோம் என்றால், நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும், வேதனைகளும் இல்லாமல் வாழலாம்...!!
ஆதலால்நாம்தாழ்வானாலும்,உயர்வானாலும்,ஏழையானாலும்,பணக்காரனாலும்,ஞானியானாலும் எப்பொழுதும் எந்த நேரத்திலும், தாழ்மையாகவும்,எளிமையுமாகவும் வாழ்வோம் நம் நடத்தையின் மூலம்….!!!
வாழ்க வளமுடன், நலமுடன்.!!!
வாழ்க பல்லாண்டு ..!!!
பாம்புக்கு தான் காதுகள் கிடையாதே
ReplyDelete