Sunday, 24 March 2019

வெற்றியுடன் கணக்கை தொடங்கியது சிஎஸ்கே: முதல் போட்டியில் பெங்களூரு படுதோல்வி

*வெற்றியுடன் கணக்கை தொடங்கியது சிஎஸ்கே: முதல் போட்டியில் பெங்களூரு படுதோல்வி*

*ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.*

*12-ஆவது ஐபிஎல் சீசன் இன்று சேப்பாக்கத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.*

*அதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 70 ரன்களுக்கு சுருண்டது.*

*இதையடுத்து, 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியில் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராயுடுவும், ரெய்னாவும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.*

*இந்த போட்டியில் 15 ரன்களை அடித்த ரெய்னா, ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற மைல்கல்லை அடைந்தார். இதையடுத்து, அவர் 19 ரன்கள் எடுத்திருந்த போது மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.*

*இதைத்தொடர்ந்து, ராயுடுவுடன் ஜாதவ் இணைந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு 28 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் போல்டானார். அதன்பிறகு, ஜாதவ் மற்றும் ஜடேஜா சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.*

*சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.*

*ஜாதவ் 13 ரன்களுடனும், ஜடேஜா 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.*

No comments:

Post a comment